- Advertisement -
ஐ.பி.எல்

இது கிடைச்சா போதும் இந்தியாவுக்காக விளையாடலாம்.. பாண்டிங் கொடுத்த மெசேஜ் இது தான்.. பிரப்சிம்ரன் பேட்டி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 1ஆம் தேதி லக்னோவில் 13வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் லக்னோவை அதனுடைய சொந்த மண்ணில் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ 20 ஓவரில் தடுமாற்றமாக செயல்பட்டு 171-7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 44, ஆயுஷ் படோனி 41 ரன்கள் எடுத்தார்கள்.

பஞ்சாப் அணிக்கு அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக விளையாடிய பஞ்சாப் ஆரம்பம் முதலே லக்னோவை அதிரடியாக எதிர்கொண்டு 16.2 ஓவரில் 177-2 ரன்களை எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. அந்த அணிக்கு துவக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாடி அரை சதத்தை அடித்து 69 (34) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

பாண்டிங் மெசேஜ்:

அவருடன் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அரை சதத்தை அடித்து 52* (30) ரன்கள் அடித்தார். இறுதியில் நேஹல் வதேரா தமது பங்கிற்கு அதிரடியாக 43* (25) ரன்கள் எடுத்து ஃபினிஷிங் செய்தார். அதனால் பஞ்சாப் எளிதாக வென்று தங்களது இரண்டாவது வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. லக்னோவுக்கு அதிகபட்சமாக திக்வேஷ் சிங் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

இந்நிலையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே மனநிலையுடன் விளையாடுமாறு தங்களின் ஜாம்பவான் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஆலோசனை தெரிவித்ததாக இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் பிரப்சிம்ரன் தெரிவித்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினால் இந்தியாவுக்காகவும் விளையாடலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

இந்திய அணி வாய்ப்பு:

“ரிக்கி பாண்டிங் மற்றும் அணி நிர்வாகத்தில் இருப்பவர்கள் ஜாம்பவான்கள். அவர்கள் பேசும் போதெல்லாம் எப்போதும் நேர்மறையான உணர்வு இருக்கும். நான் தனியாக சிந்திக்கிறேன் என்று எதுவும் இல்லை. வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே மனநிலையுடன் விளையாடுமாறு அவர்கள் எங்களிடம் கேட்டுக் கொள்கிறார்கள். எங்களுடைய ஆட்டத்திற்கு ஆதரவு கொடுக்குமாறும் அவர்கள் கேட்டுக் கொள்கின்றனர்”

இதையும் படிங்க: இதெல்லாம் சகஜம்.. எங்க டீம்ல இன்னும் அதையே கண்டுபிடிக்கல.. பஞ்சாப்பிடம் தோற்க இதான் காரணம்.. ரிஷப் பண்ட்

“இந்தப் போட்டியில் செட்டிலாகி விட்டால் கடைசி வரை நின்று போட்டியை முடிக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன். வித்தியாசமான ஷாட்டுகளை அடிப்பதற்காக நிறைய பயிற்சிகளை எடுக்கிறேன். அவற்றில் சிலவற்றை இன்று இரவு நன்றாக அடித்தது சிறப்பானது. ஒரு இளம் வீரராக உங்களுக்கு இது போன்ற நல்ல துவக்கம் கிடைப்பது சிறப்பான விஷயம். இது இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற உங்களுடைய இலக்கை சாதிப்பதற்கான ஒரு இடமாகும்” என்று கூறினார்.

- Advertisement -