CSK : உடனடியாக சி.எஸ்.கே அணியை தடை பண்ணுங்க. சட்டசபையில் பரபரப்பை ஏற்படுத்திய – சட்டமன்ற உறுப்பினர்

CSK
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் இந்த நடப்பு 2023-வது ஆண்டிற்கான பதினாறாவது ஐபிஎல் தொடரானது கடந்த மார்ச் 31-ஆம் தேதி துவங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பங்கேற்று விளையாடி வருகிறது.

IPL-2023

- Advertisement -

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பேசியுள்ள விவகாரம் தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை தாங்கள் விளையாடிய 13 சீசன்களில் ஒன்பது முறை இறுதிப்போட்டிக்கும், 11 முறை பிளேஆப் சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது.

அதோடு நான்கு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள சிஎஸ்கே அணியானது அதிகமுறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணிகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இப்படி தோனியின் தலைமையிலான சிஎஸ்கே அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் வேளையில் ஐபிஎல் தொடரில் இருந்து சிஎஸ்கே-வை உடனடியாக தடை செய்ய வேண்டும் என நேற்று சட்டமன்ற உறுப்பினர் சட்டப்பேரவையில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CSK-1

அந்த வகையில் அந்த சட்டமன்ற உறுப்பினர் கூறியதாவது : தமிழகத்தில் பல திறமையான இளம் கிரிக்கெட் வீரர்கள் இருக்கின்றனர். ஆனாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகத்தால் எந்த ஒரு தமிழக வீரரும் வாங்கப்படுவதில்லை. அதேவேளையில் தமிழக வீரர்கள் வெளிமாநில அணிகளுக்காக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

- Advertisement -

தமிழ்நாட்டிற்கான பெயரை வைத்துக் கொண்டு தமிழக வீரர்களை எடுக்காமல் பல கோடிகளில் சிஎஸ்கே அணி லாபம் ஈட்டுகிறது. இதனால் தமிழக வீரர்களுக்கு என்ன பலன் இருக்கிறது. தமிழக வீரர்களே இடம்பெறாமல் தமிழ்நாட்டுக்கான அணி என்று சொல்லிக் கொள்ளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என அவர் கோரிக்கையை விடுத்திருந்தார்.

இதையும் படிங்க : CSK : இன்றைய போட்டிக்கான சி.எஸ்.கே அணியில் இந்த 3 பேர் விளையாட வாய்ப்பில்லை – ரவீந்திர ஜடேஜா பேட்டி

அதேபோன்று சட்டப்பேரவை முடிந்து வெளியே வந்த பிறகும் அவர் பேசுகையில் : தமிழகத்தில் பல திறமையான வீரர்கள் இருந்தும் ஏன் சிஎஸ்கே அணியின் நிர்வாகம் அவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து ஒருவரையும் எடுக்கவில்லை என்றால் கேட்பதற்கு யாரும் இல்லை என்று சிஎஸ்கே அணியின் நிர்வாகம் நடந்து கொள்கிறதா? இதற்கான சரியான பதில் கிடைக்கும் வரை போராடுவேன் என அவர் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement