இப்போதையே ப்ளேயர்ஸ் மாதிரி அல்லாமல் 13 வருடம் தொடர்ந்து விளையாடினேன் ஆனாலும் – ஆதங்கப்படும் சௌரவ் கங்குலி

Ganguly
- Advertisement -

இந்தியாவை சேர்ந்த நட்சத்திரம் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி இந்தியா கண்ட மகத்தான கேப்டன்களில் முக்கியமானவராக போற்றப்படுகிறார். 90களின் இறுதியில் சூதாட்டப் புகாரில் சிக்கி அவப்பெயருக்கு உள்ளான சமயத்தில் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் தனது அதிரடியான மாற்றங்களாலும் வீரேந்திர சேவாக், கௌதம் கம்பீர், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், எம்எஸ் தோனி போன்ற தரமான இளம் வீரர்களை கண்டறிந்து வாய்ப்பளித்து அவர்களை தனது ஆக்ரோஷம் நிறைந்த கேப்டன்ஷிப் வாயிலாக அபாரமாக வழிநடத்தி ஒரு வருடத்திலேயே வெற்றி நடைபோடும் அணியாக மாற்றினார்.

Ganguly

- Advertisement -

அவரது தலைமையில் 2001இல் சொந்த மண்ணில் நடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் அப்போது உலகை மிரட்டிய ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலியாவிடம் முதல் போட்டியில் தோற்றாலும் அதன்பின் கொதித்தெழுந்த இந்தியா 2 – 1 என்ற கணக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்தது. 2002இல் வென்றிருக்க வேண்டிய சாம்பியன்ஸ் டிராபியை மழையால் இலங்கையுடன் பகிர்ந்து கொண்ட அவரது தலைமையிலான இந்தியா இங்கிலாந்தில் நடந்த நாட்-வெஸ்ட் முத்தரப்பு தொடரை வென்று அசத்தியது.

கிரேக் சேப்பல்:
பின்னர் 2003 உலகக்கோப்பையில் ஃபைனல் வரை சென்று தோல்வியடைந்தாலும் அவரது தலைமையில் வெளிநாடுகளில் நிறைய சரித்திரம் வாய்ந்த வெற்றிகளை இந்தியா பதிவு செய்தது. அதனால் மகத்தான கேப்டனாக வலம் வந்த அவரது கேரியரில் மோசமான வருடமாக 2005 அமைந்தது. ஏனெனில் அந்த சமயத்தில் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் கிரேக் சேப்பல் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரின் கேப்டன்ஷிப் பதவியை பறித்த அப்போதைய பிசிசிஐ அணியில் இருந்தும் அதிரடியாக நீக்கியது.

Chappell

அதனால் மொத்த ரசிகர்களும் அதிர்ச்சியடைந்த நிலையில் அதற்காக அசராத அவர் தனது பெயர் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் அளவுக்கு உள்ளூர் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி மீண்டும் கம்பேக் கொடுத்தார். அதன்பின் சாதாரண வீரராக விளையாடிய அவர் ஒருசில சதங்களை அடித்து மிகச் சிறப்பாக செயல்பட்டு யாரும் எதிர்பாராத வகையில் கடந்த 2008ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஒரு காலத்தில் தன்னை அதிரடியாக நீக்கிய பிசிசிஐயின் தலைவராகும் அளவுக்கு தற்போது அபார வளர்ச்சி கண்டுள்ள அவர் களத்தில் மிகச்சிறந்த கேப்டனாக செயல்பட்டதைப்போலவே நிர்வாகத்திலும் அசத்தி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் இந்தியாவுக்காக 1992இல் அறிமுகமாகி 17 வருடங்கள் விளையாடிய அவர் இப்போதெல்லாம் பணிச்சுமையை காரணம் காட்டி அடிக்கடி பிரேக் எடுக்கும் நட்சத்திர வீரர்களை போல் அல்லாமல் 13 வருடங்களாக ஓய்வெடுக்காமல் தொடர்ச்சியாக விளையாடிய போதும் கிரேக் சேப்பல் சர்ச்சையால் 6 மாதங்கள் இந்திய அணியிலிருந்து வழுக்கட்டாயமாக விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக தற்போது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Ganguly 1

13 தொடர்ச்சியான வருடங்கள்:
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடியதை எப்போதும் நான் கடினமாக நினைத்ததில்லை. ஆனால் அந்த மொத்த தருணமும் கடினமாக அமைந்தது. ஏனெனில் அது என்னுடைய பேட்டிங், பவுலிங் என்பதற்கு அப்பாற்பட்டதாக இருந்தது. எனவே அதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை”

- Advertisement -

“அதுவரை இந்தியாவுக்காக தொடர்ச்சியாக 13 வருடங்கள் நான் விளையாடினேன். அந்த காலகட்டத்தில் எந்த ஒரு சுற்றுப்பயணத்தையும் அல்லது தொடரையும் அல்லது போட்டியையும் நான் தவற விட்டதில்லை. சொல்லப்போனால் இப்போதைய வீரர்களைப் போல் அடிக்கடி ஓய்வெடுத்ததில்லை. எனவே அந்தக் கடினமான 6 மாதங்களை எனது ஒட்டுமொத்தமான 17 வருட கிரிக்கெட் கேரியரின் ஓய்வு நாட்களாக கருதுகிறேன்” என்று கூறினார்.

Chappell1

2005இல் ஏற்பட்ட சர்ச்சைக்கு பின் இந்திய அணிக்கு திரும்பிய அவருக்கு கேப்டன் பதவி கொடுக்கப்படவில்லை. அந்தக் கடினமான நாட்களில் தூக்கமே வராது என தெரிவிக்கும் சௌரவ் கங்குலி தினந்தோறும் தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டு தான் அந்த நாட்களை கடந்ததாக வேதனை தெரிவிக்கிறார். மேலும் யாரோ ஒருவர் தம்மை நீக்கும் தாம் ஒன்றும் தரமற்றவர் இல்லை என்பதாலேயே உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி கம்பேக் கொடுத்த அடுத்தசில வருடங்களிலேயே நல்ல பார்மில் இருக்கும் போது ஓய்வு பெற்றதாகவும் தெரிவிக்கிறார்.

இதையும் படிங்க : தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து இப்படியா சொல்வீங்க – ஸ்ரீசாந்தை திட்டும் ரசிகர்கள், அப்படி என்ன செய்தார்?

இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “அந்த சமயங்களில் நான் மிகவும் ஏமாற்றமடைந்து கோபத்துடன் இருமடங்கு கடினமாக உழைத்தேன். என்னை நானே நிரூபிக்க வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொண்டேன். ஏனெனில் எனக்குள் இன்னும் நிறைய கிரிக்கெட் மீதமிருந்ததை உணர்ந்தேன். முக்கியமான ஒருவருக்கு (சேப்பலுக்கு) முன்பாக என்னை நான் நிரூபிப்பேன் என்று நம்பினேன்” என கூறினார்.

Advertisement