அப்போ இத்தனை நாள் உழைச்ச இஷான் கிசான் எங்க போவாரு? பேசாம ஸ்ரேயாஸ் ஐயரை ட்ராப் பண்ணுங்க – முன்னாள் இந்திய வீரர் அதிரடி

Shreyas Iyer Ishan Kishan
- Advertisement -

ஐசிசி நடத்தும் 2023 உலகக் கோப்பை தொடரில் விளையாடி 2011 போல சாம்பியன் பட்டம் என்று சரித்திரம் படைப்பதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் காயத்திலிருந்து குணமடைந்த கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்திய அணியை பலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இருப்பினும் காயத்திலிருந்து குணமடைந்து எவ்விதமான போட்டிகளிலும் விளையாடாத அவர்கள் நேரடியாக களமிறங்குவது சரியான முடிவல்ல என்று மதன் லால் போன்ற சில முன்னாள் வீரர்கள் ஏற்கனவே விமர்சித்தார்கள்.

அதற்கேற்றார் போல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நேரடியாக களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 14 ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தையே கொடுத்தார். மறுபுறம் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஹாட்ரிக் அரை சதங்கள் அடித்து நல்ல ஃபார்மில் இருக்கும் இஷான் கிசான் காயமடைந்த கேஎல் ராகுலுக்கு பதிலாக மிடில் ஆர்டரில் களமிறங்கும் வாய்ப்பை பெற்று 66/4 என இந்தியா சரிந்த போது ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்து 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 82 ரன்கள் அடித்து ஓரளவு மானத்தை காப்பாற்றினார்.

- Advertisement -

இஷான் இருக்கணும்:
குறிப்பாக துவக்க வீரராக களமிறங்கி வெற்றிகரமாக செயல்பட்ட அவரால் மிடில் ஆர்டரில் சாதிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்த போது ஹரிஷ் ரவூப் போன்ற தரமான பவுலர்களை கொண்ட பாகிஸ்தானை அழுத்தமான சமயத்தில் சிறப்பாக எதிர்கொண்டு தம்மால் இந்தியாவுக்காக அனைத்து இடங்களிலும் அசத்த முடியும் என்பதை நிரூபித்தார். இருப்பினும் தற்போது ராகுல் குணமடைந்து வருவதால் அவர் பெஞ்சில் அமர வைக்கப்படுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 2023 உலக கோப்பையில் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் இல்லாத குறையை தீர்க்க இசான் கிசான் அவசியம் என்று தெரிவிக்கும் முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா வேண்டுமானால் ஸ்ரேயாஸ் ஐயரை நீக்கலாம் என்று கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நாம் இருவரையும் பற்றி பேசுகிறோம். ஆனால் அது ஏன் ஸ்ரேயாஸ் ஐயராக இருக்கக்கூடாது? இனிமேல் நாம் ஸ்ரேயாஸ் இடத்தைப் பற்றியும் கேள்வி எழுப்ப வேண்டும்”

- Advertisement -

“ஏனெனில் டாப் ஆர்டரில் அசத்தியை இசான் கிசானை நாம் இனியும் ரிசர்வ் வீரராக வைத்திருக்க முடியாது.மேலும் மிடில் ஆர்டரில் அவரால் விளையாட முடியுமா என்று அனைவரும் கேள்வி எழுப்பினர். இருப்பினும் அதற்கு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அழுத்தமான சமயத்தில் சிறப்பாக செயல்பட்டு பதிலடி கொடுத்த அவர் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் இல்லாத பிரச்சனையை தீர்வு செய்யக்கூடியவர்”

இதையும் படிங்க: 2023 உ.கோ அணியில் செலக்ட் பண்ண அவரெல்லாம் ஒரு ஆல் ரவுண்டரா? இந்திய வீரர் பற்றி சஞ்சய் பங்காருடன் ஸ்ரீகாந்த் மோதல்

“எனவே அவர் நிச்சயமாக இந்திய அணியில் நேரடியாக இடம் பெற வேண்டும். அதே சமயம் கேஎல் ராகுல் நல்ல புள்ளி விவரங்களை வைத்துள்ளார். கடந்த சில வருடங்களாக அவரும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்துவதால் அணியில் இருக்க வேண்டும்” என்று கூறினார். இந்த நிலையில் ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் ராகுல் விளையாட வருவதால் இதற்கான விடை தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement