2023 உ.கோ அணியில் செலக்ட் பண்ண அவரெல்லாம் ஒரு ஆல் ரவுண்டரா? இந்திய வீரர் பற்றி சஞ்சய் பங்காருடன் ஸ்ரீகாந்த் மோதல்

Krish Srikkanth
- Advertisement -

ஐசிசி 2023 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5ஆம் தேதி அகமதாபாத் நகரில் துவங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் விளையாடி 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துவதற்காக ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் காயத்திலிருந்து குணமடைந்த கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதே போல மணிக்கட்டு ஸ்பின்னரான சஹால் தேர்வு செய்யப்படாததற்கு சில முன்னாள் வீரர்கள் விமர்சனத்தை வைத்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த அணியில் பேட்டிங் ஆழத்தை அதிகரிப்பதற்காக ஷார்துல் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு 2011 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியை தேர்வு செய்த முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

தாக்கூர் ஆல் ரவுண்டரா:
கடந்த சில வருடங்களாகவே ஓரளவு நிலையான வாய்ப்புகளை பெற்று அசத்தி வரும் 2019 உலகக் கோப்பைக்குப்பின் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலராக சத்தமின்றி சாதனை படைத்து வருகிறார். குறிப்பாக எதிரணி பார்ட்னர்ஷிப் அமைக்கும் போது உடைப்பதையும் ஒரே ஓவரில் 2 மேஜிக் விக்கெட்டுகள் எடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ள அவர் அதிக ரன்களை வாரி வழங்குவதாலேயே ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படுவதில்லை.

இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோருடைய நிகழ்ந்த காரசாரமான விவாதம் பின்வருமாறு.
ஸ்ரீகாந்த்: சர்துள் தாக்கூர் முழுமையான பேட்ஸ்மேனா?
பங்கர்: ஆம் டெஸ்ட் கிரிக்கெட்டில்
ஸ்ரீகாந்த் : நான் ஒரு நாள் போட்டிகளைப் பற்றி பேசுகிறேன். அதில் அவர் ஆல் ரவுண்டரா?
பங்கர்: ஆம் ஆல் ரவுண்டர் தான்
ஸ்ரீகாந்த்: அப்படி ஒரு ஆல் ரவுண்டர்? கடந்த டி20 உலக கோப்பைக்குப்பின் அவருடைய ஒரே ஒரு அதிகபட்ச ஸ்கோர் 25.
பங்கர்: இருப்பினும் அவருடைய பவுலிங் சிறப்பாக இருக்கிறது.
ஸ்ரீகாந்த்: எப்படி அவருடைய பவுலிங் சிறப்பாக இருக்கிறது? அவருடைய கேரியரில் எத்தனை முறை முழுமையான 10 ஓவர்கள் வீசியுள்ளார்?

- Advertisement -

அப்போது செய்தியாளர் குறுக்கிட்டதை தொடர்ந்து ஸ்ரீகாந்த் விரிவாக பேசியது பின்வருமாறு. “அனைவரும் இங்கே 8வது இடத்தில் பேட்ஸ்மேன் தேவை என்று சொல்கிறார்கள். ஏன் 8வது இடத்தில் பேட்ஸ்மேன் தேவை? அந்த இடத்தில் தாக்கூர் பெரும்பாலும் 10 ரன்கள் கூட அடிக்காமல் 10 ஓவர்களையும் முழுமையாக வீசுவதில்லை. எடுத்துக்காட்டாக நேபாளுக்கு எதிராக அவர் 4 ஓவர்கள் மட்டுமே வீசினார். பெரும்பாலும் அவரை போன்றவர்கள் ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக வெளிப்படுத்தும் செயல்பாடுகளை பார்க்காதீர்கள்”

இதையும் படிங்க: 2023 உலக கோப்பை இந்திய அணியில் ஒரு ரிசர்வ் வீரர்கள் கூட தேர்வு செய்யாததற்கு காரணம் என்ன? இதை கவனச்சீங்களா

“மாறாக ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற அணிகளுக்கு எதிரான செயல்பாடுகளை பாருங்கள். அதனால் தான் ஒரு வீரரின் சராசரியை பார்த்து மட்டும் முட்டாள்தனமான முடிவை எடுக்காதீர்கள் என்று நான் சொல்வேன். மேலும் 2011 உலகக் கோப்பையில் அஸ்வின், சாவ்லா ஆகிய 2 ஸ்பின்னர்கள், ஒரு மித வேகப்பந்து வீச்சாளர் முனாப் பட்டேல், ஒரு பேட்ஸ்மேன் யூசுப் பதானை நாங்கள் ரிசர்வ் வீரர்களாக தேர்வு செய்தோம்” என்று கூறினார்.

Advertisement