உலகக்கோப்பை 2023 : 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்து அறிவித்த – பியூஷ் சாவ்லா

Piyush-Chawla
- Advertisement -

இந்தியாவில் எதிர்வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டிற்கு பிறகு முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அந்த வகையில் தற்போது இந்திய அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது.

எதிர்வரும் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி வரும் செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் வெளியாகும் என்கிற வேளையில் இந்திய அணியானது ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் உலகக் கோப்பை தொடரில் விளையாடக்கூடிய 15 பேர் கொண்ட இந்திய அணியை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தொகுத்து வழங்கி வருகின்றனர். அந்த வகையில் 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்ற போது அந்த அணியில் இடம் பெற்று இருந்த சுழற்பந்து வீச்சாளரான பியூஷ் சாவ்லா தற்போது எதிர்வரும் இந்த 2023-ஆவது ஆண்டிற்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை தொகுத்து வழங்கியுள்ளார்.

அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணியில் முன்னணி வீரர்களான ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு அவர் இடமளிக்கவில்லை. ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் அவரால் சிறப்பாக விளையாட முடியாது என்பதனாலும், தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை எல்லாம் வீணடித்த சஞ்சு சாம்சனையும் அவர் அணியிலிருந்து வெளியேற்றி உள்ளார். அதேபோன்று அக்சர் பட்டேலுக்கும் அவர் இடமளிக்கவில்லை.

- Advertisement -

அவர்களுக்கு பதிலாக சொதப்பி வரும் சூரியகுமார் யாதவிற்கும், இளம் வீரர் திலக் வர்மாவிற்கும் அவர் வாய்ப்பினை வழங்கியுள்ளார். மேலும் மற்றபடி பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் ஆசிய கோப்பை தொடருக்காக தேர்வு செய்யப்பட்ட அதே அணியைத்தான் உலகக்கோப்பை தொடருக்கான அணியாக பியூஷ் சாவ்லா தேர்ந்தெடுத்துள்ளார். அந்த வகையில் பியூஷ் சாவ்லா தேர்வு செய்து வெளியிட்ட 15 பேர் கொண்ட உலகக் கோப்பை இந்திய அணி இதோ :

இதையும் படிங்க : 1984 – 2023 வரை நடைபெற்றுள்ள ஆசியக்கோப்பை தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணி – எது தெரியுமா?

1) ரோஹித் சர்மா (கேப்டன்), 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) திலக் வர்மா, 6) கே.எல் ராகுல், 7) இஷான் கிஷன், 8) ரவீந்திர ஜடேஜா, 9) ஹார்டிக் பாண்டியா, 10) குல்தீப் யாதவ், 11) முகமது ஷமி, 12) ஷர்துல் தாகூர், 13) ஜஸ்ப்ரீத் பும்ரா, 14) முகமது சிராஜ், 15) யுஸ்வேந்திர சாஹல்.

Advertisement