- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஜெய்ஸ்வால் கிடையாது.. விராட், ரோஹித் இடத்தை அந்த 2 இந்திய வீரர்கள் நிரப்புவாங்க.. பியூஸ் சாவ்லா

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி 17 வருடங்கள் கழித்து வென்றது. அந்த வெற்றியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றனர். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக சிறப்பாக விளையாடிய அவர்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த டாப் 2 பேட்ஸ்மேன்களாக சாதனை படைத்துள்ளனர்.

அந்தளவுக்கு எதிரணிகளை சொல்லி அடித்த அவர்கள் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றினர். இருப்பினும் தற்போது 35 வயதை கடந்து விட்டதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அவர்கள் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். அத்துடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிலும் விராட் கோலி – ரோஹித் சர்மா இன்னும் ஓரிரு வருடங்களில் ஓய்வு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ரோஹித் சர்மா – விராட் கோலி:

அது போன்ற சூழ்நிலையில் அதிரடியாக விளையாடக்கூடிய ரோஹித் சர்மாவின் இடத்தை ஜெய்ஸ்வால் நிரப்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடும் அவர் அடுத்த தலைமுறை துவக்க வீரராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். இந்நிலையில் வருங்காலங்களில் ரோஹித் மற்றும் விராட் கோலி இடத்தை சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் நிரப்பும் திறமையைக் கொண்டுள்ளதாக முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் நல்ல டெக்னிக் கொண்டுள்ளார். ஒரு பேட்ஸ்மேன் சுமாரான ஃபார்முக்குள் செல்லும் போது வலுவான டெக்னிக்கை கொண்டிருந்தால் அதிலிருந்து மீண்டு வந்து விட முடியும். எனவே நல்ல டெக்னிக்கை கொண்டிருக்கும் பேட்ஸ்மேன்கள் நீண்ட காலம் ஃபார்ம் அவுட்டாக இருக்க முடியாது”

- Advertisement -

சுப்மன் கில் – ருதுராஜ் கெய்க்வாட்:

“எனவே சுப்மன் கில் கண்டிப்பாக அவர்களில் ஒரு இடத்தை நிரப்புவார். அதே போல ருதுராஜ் கெய்க்வாட் தற்போது காயங்களால் தடுமாறுவது விளையாட்டின் ஒரு அங்கமாகும். இருப்பினும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் வித்தியாசமான வீரராக செயல்பட்டுள்ளார். எனவே அந்த 2 வீரர்களும் ஸ்பெஷலாக எனக்குத் தோன்றுகிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க: சச்சினின் வரலாற்று சாதனையை முறியடிக்கப்போகும் விராட் கோலி.. 147 ஆண்டுகால கிரிக்கெட்டில் முதல் வீரர்

அவர் கூறுவது போல சுப்மன் கில் ஏற்கனவே 3 வகையான கிரிக்கெட்டிலும் ஓரளவு நன்றாக விளையாடி ஆல் ஃபார்மட் பிளேயர் என்ற பெயரை பெற்றுள்ளார். அதனாலேயே அவரை வருங்கால கேப்டனாக வளர்க்க விரும்பும் பிசிசிஐ தற்போது துணை கேப்டனாக அறிவித்துள்ளது. அதே போல 6 ஒருநாள், 23 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ருதுராஜ் இந்திய அணியில் நிலையான இடம் பிடிக்க போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -