சச்சினின் வரலாற்று சாதனையை முறியடிக்கப்போகும் விராட் கோலி.. 147 ஆண்டுகால கிரிக்கெட்டில் முதல் வீரர்

Kohli-and-Sachin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடருடன் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். தற்போது 35 வயதாகும் அவர் தொடர்ந்து இன்னும் சில ஆண்டுகள் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருப்பதாகவும் அறிவித்திருந்தார். அதன்படி இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரிலும் அவர் விளையாடியிருந்தார்.

சச்சினின் சாதனையை முறியடிக்கப்போகும் விராட் கோலி :

இவ்வேளையில் தற்போது அடுத்ததாக நீண்ட இடைவெளிக்கு பிறகு வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறார். இந்தியா மற்றும் பங்களாதேஷ் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இந்த இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியானது செப்டம்பர் 19-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்த தொடரில் விளையாட இருப்பதன் மூலம் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடிக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ரன்மெஷினாக பார்க்கப்படும் விராட் கோலி ஏகப்பட்ட சாதனைகளை தன் வசம் வைத்திருக்கும் வேளையில் தற்போது அடுத்ததாக சச்சின் சாதனையை முறியடிக்க இருக்கும் சம்பவம் குறித்தும் தற்போது தகவல் வெளியாகி அனைவரது மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 58 ரன்கள் விராட் கோலி அடிக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் விரைவாக 27000 ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையில் முதலிடத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளி அவர் முதலிடத்தை பிடிப்பார்.

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் 623 இன்னிங்ஸ்களில் விளையாடி 27,000 ரன்களை குவித்து வேகமாக 27000 ரன்களை குவித்த வீரராக டெண்டல்கர் முதல் இடத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது 591 இன்னிங்ஸ்கள் மட்டுமே விளையாடியுள்ள விராட் கோலி 26942 ரன்கள் குவித்துள்ளதால் மேலும் 58 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் 30 இன்னிங்ஸ்களுக்கு முன்னதாகவே 27000 ரன்களை அதிவேகமாக பூர்த்தி செய்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : என்ன நடந்தாலும் அந்த மாற்றம் எங்களது அணியில் இருக்காது.. இந்திய அணிக்கெதிரான தொடர் குறித்து – ஆஸி கோச் பேட்டி

அதேபோன்று 147 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட்டில் 600 இன்னிங்ஸ்களுக்குள் 27 ஆயிரம் ரன்களை அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையும் விராட் கோலி நிகழ்த்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement