பிட்ச் உருவாக்குவதை ஐபிஎல் பார்த்து கத்துக்கோங்க! பாகிஸ்தான் வாரியத்தை விமர்சித்த முன்னாள் பாக் வீரர்

IPL 2022 (2)
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் ஒரு வாரத்தை எட்டியுள்ளது. கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று உலகப் புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கிய இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை உட்பட 10 அணிகள் கோப்பைக்காக பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. வரும் மே 29-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரின் சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்க மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளான. இந்த தொடர் துவங்கி ஒருவாரம் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை நடைபெற்ற அனைத்து போட்டிகளுமே ரசிகர்களுக்கு த்ரில் விருந்து படைத்து வருகிறது.

IPL 2022

- Advertisement -

சம போட்டியில் பேட்டிங் – பவுலிங்:
இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற 8 போட்டிகளில் 2 போட்டிகளில் இரு அணி பேட்ஸ்மேன்களும் சிக்சர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிட்டு ரசிகர்களை ரன் மழையில் நனைய வைத்து 400 ரன்களுக்கு மேல் விளாசினார்கள். அதே சமயம் எஞ்சிய போட்டிகளில் 200 ரன்கள் அடிக்கவில்லை என்றாலும் தேவையான ரன்களை அடித்த பேட்ஸ்மேன்களுக்கு நிகராக பந்து வீச்சாளர்களும் தங்களது திறமையை பயன்படுத்தி விக்கெட்டுகளை எடுத்தனர்.

மொத்தத்தில் இந்த வருட ஐபிஎல் தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டுக்கும் கைகொடுக்கும் வகையில் பிட்ச்கள் தயாரிக்கப்பட்டுள்ளதால் பேட் மற்றும் பந்து ஆகிய இரண்டுக்கும் சம அளவிலான தரமான போட்டியை ரசிகர்கள் கண்டுகளித்து வருகின்றனர். அந்த அளவுக்கு மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் மட்டும் நடைபெற்று வரும் இந்த வருட ஐபிஎல் தொடரின் மைதானங்கள் தரமாக உருவாக்கப்பட்டுள்ளது பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

பாராட்டிய சல்மான் பட்:
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பயன்படுத்தப்படும் பிட்சுகள் தரமாக உள்ளது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார். இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரில் பயன்படுத்தப்படும் பிட்ச்கள் அபாரமாக உள்ளது. அதிலும் பந்து நன்றாக ஸ்விங் ஆகிறது. அதே சமயம் அதிக ஸ்கோர்களை அடிக்கக் கூடிய போட்டிகளையும் பார்க்க முடிகிறது. ஸ்விங் பந்துகளை கணித்து நின்று விளையாடும் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடுகின்றனர். அதேபோல் உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, ஹர்சல் படேல் போன்ற பவுலர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். புதிய பந்து பவுலர்களுக்கு உதவியை அளிக்கிறது. குறிப்பாக உமேஷ் யாதவ் நல்ல லைன் மற்றும் லென்த்தில் பந்துவீசி சிறப்பான ரிதத்தில் உள்ளார். இது இந்த வருடம் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பவுலர்கள் அனைவருக்கும் நல்ல செய்தியாகும். மொத்தத்தில் ஐபிஎல் பிட்ச்கள் தரமாக உள்ளது” என கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவதுபோல இந்த வருடம் ஐபிஎல் தொடரில் வெறும் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் மட்டுமில்லாமல் அதற்கு ஈடாக பவுலர்களும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் பெங்களூரு – பஞ்சாப் அணிகள் மோதிய முதல் போட்டியில் 200 ரன்கள் அடிக்கப்பட்டது.

Butt

ஆனால் அதே மைதானத்தில் 2 நாட்களுக்கு பின் நடந்த கொல்கத்தா – பெங்களூரு போட்டியில் 130 ரன்களை அடிப்பதற்கு பேட்ஸ்மேன்கள் சிரமப்பட்டனர். அந்த அளவுக்கு எந்த ஒரு பிட்ச்சும் ஒரு தலைப்பட்சமாக இல்லாமல் சமமாக இருந்து வருகிறது. அதாவது ஒரு மைதானம் இப்படித்தான் இருக்கும் என கணிக்கமுடியாத அளவுக்கு இந்த வருடம் ஐபிஎல் தொடரில் பயன்படுத்தப்படும் பிட்சுகள் உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கிறது.

- Advertisement -

கத்துக்கோங்க பாகிஸ்தான்:
இதன் காரணமாக ஒரு பிட்ச்சை எப்படி உருவாக்க வேண்டும் என்பதை ஐபிஎல் தொடரை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு சல்மான் பட் கொட்டு வைத்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இங்கே (பாகிஸ்தானில்) பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா மோதிய டெஸ்ட் தொடரில் பார்த்த பிட்ச்கள் மோசமாக இருந்தது. அதற்கு ஐபிஎல் தொடரில் பயன்படுத்தப்படும் பிட்சுகள் எவ்வளவோ பரவாயில்லை” என கூறினார்.

PAK

சமீபத்தில் 24 வருடங்கள் கழித்து பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா பங்கேற்றது. அந்த தொடருக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தார் ரோட் போல வழுவழுவென பேட்டிங்க்கு மட்டும் சாதகமான பிட்ச்சை பயன்படுத்தியதால் முதல் 2 போட்டிகள் டிராவில் முடிந்தன. அதன் காரணமாக உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு விமர்சனங்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சந்தித்தது.

- Advertisement -

அதன் பின் நடந்த கடைசி போட்டியிலும் முதல் 3 நாட்களின் போட்டி டிராவை நோக்கிச் சென்ற நிலையில் கடைசி ஒன்றரை நாளில் அதிரடியாக செயல்பட்ட ஆஸ்திரேலியா வெற்றியை ருசித்து 1 – 0 என்ற கணக்கில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் மண்ணை கவ்வ செய்தது.

இதையும் படிங்க : ஹிட்மேன் ரோஹித், கிங் கோலியை பார்த்து பயமில்லை ! தைரியமாக பந்துவீச தயார் – தமிழக வீரர் உறுதி

அப்படி பிட்ச் காரணமாக மோசமான அவமானத்தை சந்தித்துள்ள பாகிஸ்தான் வரும் காலங்களில் பிட்ச் எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்பதை ஐபிஎல் தொடரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டுமென சல்மான் பட் தெரிவித்துள்ளார்.

Advertisement