பாகிஸ்தான் நாட்டில் நீங்க விளையாட மாட்டீங்களா? அப்போ நாங்க மட்டும் – பாகிஸ்தான் வாரியம் அதிரடி அறிக்கை

Eshan-PCB
- Advertisement -

2022 – 2023 ஆண்டிற்கான பிசிசிஐ பொதுக்குழு கூட்டமானது நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்தியாவில் பிசிசிஐ நிர்வாகிகளுக்கான பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் தற்போது புதிய நிர்வாகக் குழுவுடன் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக அடுத்த ஆண்டு மகளிருக்கான ஐபிஎல் தொடரை துவங்குவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

jay shah

- Advertisement -

அதேபோன்று அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரை வேறு எங்காவது மாற்ற வேண்டும் என ஐசிசி-யிடம் கோரிக்கை வைக்கவும் இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி இல்லை என்றால் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் இந்திய அணி ஆசியக்கோப்பை போட்டிகளில் பங்கேற்காது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இப்படி இந்திய கிரிக்கெட் நிர்வாகம் எடுத்த இந்த முடிவு கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரான ஜெய்ஷாவின் முடிவாக பார்க்கப்படுகிறது. இப்படி ஜெய் ஷா வெளியிட்டுள்ள இந்த கருத்தை ஏமாற்றம் அளிப்பதாக தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி அவர்கள் அதில் குறிப்பிட்டதாவது :

jaysha

அடுத்த ஆண்டு ஆசிய கோப்பையை நடுநிலையான இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரான ஜெய் ஷா கூறிய கருத்துக்கள் எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுப்பினர்களின் சுமூக ஆதரவுடனும், ஒப்புதல் உடனும் பாகிஸ்தானுக்கு ஆசிய கோப்பை நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

- Advertisement -

அந்த கூட்டத்திற்கு தலைமை வகுத்த ஜெய் ஷாவே தற்போது வேறொரு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கூறுவது ஒருதலை பட்சமாக உள்ளது. இதுபோன்ற கருத்துக்கள் மீண்டும் பிரச்சனைகளை கொண்டு வரலாம். ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் நாட்டில் பங்கேற்கவில்லை என்றால் அதற்கு அடுத்து நடைபெற இருக்கும் ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் இந்திய அணிக்காக எதிராக பங்கேற்காது என்றும் பாகிஸ்தான் வாரியம் கூறியுள்ளது.

இதையும் படிங்க : என்னய்யா ஃபிட்னெஸ் இது, தொப்பை வெளிய தெரியுது – பாகிஸ்தான் வீரர்களை விளாசும் முன்னாள் கேப்டன்

இதுவரை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் இருந்து எந்த ஒரு தகவலையும் நாங்கள் பெறவில்லை என்பதனால் கூடிய விரைவில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை கூட்டுமாறும் பாகிஸ்தான் நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement