- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய தேசிய கோடியை எங்க நாட்டில் பறக்கவிடாமல் போனதுக்கு காரணம் இதுதான் – பாக் வாரியம் கொடுத்த விளக்கம்

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பாக நடத்தப்படும் ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி கோலாகலமாக துவங்க இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் துபாய் நாடுகளில் இந்த தொடரானது நடைபெறும் வகையில் ஏற்கனவே அட்டவணையும் வெளியாகி இருந்தது.

இந்திய தேசிய கொடி கராச்சி மைதானத்தில் பறக்காதது ஏன்? :

இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய எட்டு அணிகள் மோதும் இந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடரின் இறுதி போட்டி வரை சென்று கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

மேலும் இந்த தொடர் குறித்த விவாதங்களும் பலரது மத்தியிலும் நிலவி வருகின்றன. இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதலாவது போட்டியானது வரும் டிசம்பர் 19-ஆம் தேதி கராச்சி நகரில் நடைபெறவுள்ள வேளையில் அந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத இருக்கின்றன.

இதற்காக தற்போது கராச்சி மைதானத்தில் முழுவீச்சில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும் அந்த மைதானத்தில் 7 நாடுகளின் தேசியக்கொடி மட்டும்தான் பறக்க விடப்பட்டிருக்கிறது. இதில் இந்திய நாட்டின் தேசிய கொடி பறக்கப்படவில்லை என்பது சமூக வலைதளங்களின் மூலம் வைரலானது. இந்நிலையில் இந்திய தேசிய கொடி கராச்சி மைதானத்தில் ஏன் பறக்கவில்லை? என்பது குறித்த தெளிவான தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகி ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணி சில காரணங்களால் எங்களது நாட்டிற்கு வர முடியாது என்று கூறி இங்கு வந்து விளையாட தவிர்த்து விட்டது. அதனால் போட்டிகளை துபாய்க்கு மாற்றினார்கள். எங்கள் நாட்டிற்கு வராத அணியின் தேசிய கொடியை நாங்கள் பறக்க விடக்கூடாது என்றே இந்திய தேசிய கொடியை கராச்சி மைதானத்தில் பறக்க விடவில்லை என்று தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.

இதையும் படிங்க : ரொம்ப நம்புனேன்.. ஆனா ஏன் இப்படி பண்ணாங்கனு தெரியல.. தனது நீக்கம் குறித்து – ரஹானே வருத்தம்

ஏற்கனவே பாகிஸ்தான் செல்ல மறுத்த இந்திய அணி துபாயில் விளையாடவுள்ள வேளையில் மற்ற அணிகளை போன்று தங்களது ஜெர்சியில் பாகிஸ்தான் என்ற பெயரை போட மாட்டோம் என்றும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -