இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான அஜின்க்யா ரஹானே கடந்த 2013-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 2023-ஆம் ஆண்டு வரை 85 போட்டிகளில் விளையாடி 12 சதம் மற்றும் 26 அரைசதம் என 5077 ரன்களை குவித்துள்ளார். இந்திய அணியின் அனுபவ மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக பார்க்கப்பட்ட ரகானே கடந்த பல தொடர்களாகவே இந்திய அணியால் புறக்கணிக்கப்பட்டார்.
ஏன் திடீர்னு இப்படி பண்ணாங்கன்னு தெரியல : அஜின்க்யா ரஹானே
அதுமட்டும் இன்றி தற்போது 36 வயதினை எட்டியுள்ள அவருக்கு மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் கம்பேக் என்பது நிகழாத ஒன்று என்றும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியிலிருந்து தான் நீக்கப்பட்டது குறித்து ரகானே மிக வருத்தத்துடன் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். இது குறித்து ரகானே பதிவிட்டுள்ள அந்த கருத்தில் குறிப்பிடப்பட்டதாவது :
சில வருடங்களுக்கு முன்பு நான் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டேன். ஆனாலும் மீண்டும் எனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் உலக டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். அந்த போட்டியில் நான் சிறப்பாக செயல்பட்ட போதும் ஏன் திடீரென அணியில் இருந்து என்னை நீக்கினார்கள் என்று எனக்கு தெரியவில்லை.
ஒரு மூத்த வீரராக எனக்கு இன்னும் ஒரு சில வாய்ப்புகள் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் என்னை திடீரென புறக்கணித்தார்கள் இதுகுறித்து நான் யாரிடமும் எதுவும் கேட்கப் போவது கிடையாது. ஏனெனில் அப்படிப்பட்ட ஆளும் நான் கிடையாது. என்னுடைய சிறப்பான செயல்பாடு மூலம் நான் மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க முயற்சிப்பேன்.
எனக்குள் இன்னும் அந்த பழைய நெருப்பும், ஆர்வமும் மிஞ்சி இருக்கிறது. அந்த வகையில் தான் தற்போது ரஞ்சி தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறேன். மும்பை அணிக்காக என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்திருக்கிறேன். இதன் மூலம் நிச்சயம் என்னால் மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு கம்பேக் கொடுக்க முடியும் என்றும் நம்புகிறேன்.
இதையும் படிங்க : பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடாதது ஒருவகையில் எங்களுக்கு நல்லது தான் – வங்கதேச வீரர் கருத்து
என்னுடைய நண்பர்கள் சிலர் என்னை பி.ஆர் வைத்துக்கொள்ள கூறுகிறார்கள். ஆனால் நான் என்னுடைய பேட்டிங்கின் மூலம் எனக்கான விளம்பரத்தை தேடிக் கொள்கிறேன் என்று கூறியதாக ரஹானே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.



