பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடாதது ஒருவகையில் எங்களுக்கு நல்லது தான் – வங்கதேச வீரர் கருத்து

Kayes
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா அண்மையில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இறுதி போட்டியில் விளையாடிய போது முதுகு பகுதியில் அசவுகரியத்தை உணர்ந்தார். அதன் காரணமாக அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசாத அவர் நாடு திரும்பிய பின்னர் தனது காயத்திற்கான முறையான மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டார்.

அவர் விளையாடாதது எங்களுக்கு சாதகம் : வங்கதேச வீரர் பேட்டி

ஆனாலும் அவரது காயம் முற்றிலுமாக குணமடையவில்லை என மருத்துவ அறிக்கை வெளியானது. மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் அவரது இடம் மிக முக்கியம் வாய்ந்த ஒரு இடமாக பார்க்கப்பட்ட வேளையில் அவரால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

ஏனெனில் அவரது காயத்திற்கான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் கடைசி நேரத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். அவருக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா வேகப்பந்துவீச்சு யூனிட்டில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியில் இடம்பெறாதது வங்கதேச அணிக்கு கிடைத்த கூடுதல் சாதகம் என்றும் அதனை பயன்படுத்தி நாங்கள் சிறப்பாக விளையாட முயற்சிப்போம் என்றும் வங்கதேச அணியின் துவக்க வீரர் இம்ருல் கைய்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே மிக பலம் வாய்ந்த அணி. ஆனால் தற்போதைய இந்திய அணியில் பும்ரா இல்லை. கடந்த இரண்டு வருடங்களாக அவர் எவ்வாறு பந்துவீசுகிறார் என்பது அனைவருக்குமே தெரியும். அவர் இல்லாததால் அந்த வெற்றிடத்தை எங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி நாங்கள் இந்திய அணிக்கு எதிராக ஆதிக்கத்தை செலுத்த முயற்சிப்போம்.

இதையும் படிங்க : இந்தியா கஷ்டமே இல்லாம அதை பாகிஸ்தான் அணிக்கெதிராக செய்து முடிப்பாங்க – ஹர்பஜன் சிங் கருத்து

அதே போன்று முகமது ஷமி தற்போது மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ளதால் அவரை சற்று சுதாரித்து விளையாடியாக வேண்டும். எங்களது அணியில் சாகிப் அல் ஹாசன் ஒரு தலை சிறந்த வீரர். அவர் இல்லாமல் நாங்கள் விளையாடுவது நிச்சயம் ஒரு பின்னடைவு தான் இருந்தாலும் அதனை பூர்த்தி செய்ய கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் நாங்கள் களமிறங்குவோம் என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement