இந்தியா கஷ்டமே இல்லாம அதை பாகிஸ்தான் அணிக்கெதிராக செய்து முடிப்பாங்க – ஹர்பஜன் சிங் கருத்து

Harbhajan
- Advertisement -

எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தங்களது முதலாவது லீக் போட்டியில் வரும் பிப்ரவரி 20-ஆம் தேதி வங்கதேச அணியை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது. அதற்கு அடுத்து ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் பரபரப்பான ஆட்டம் பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்திய அணி கஷ்டமே இல்லாம அடிச்சி நொறுக்கும் : ஹர்பஜன் சிங்

ஞாயிற்றுக்கிழமை அன்று துபாயில் நடைபெற இருக்கும் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளதால் இந்த போட்டிக்கான டிக்கெட் விலையும் இரட்டிப்பாகியுள்ளது இருந்தாலும் இந்த டிக்கெட் விற்பனையான சில மணி நேரங்களிலேயே அனைத்தும் விற்று தீர்ந்தன.

- Advertisement -

இந்நிலையில் இந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணி எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் ஆதிக்கம் செலுத்தி எளிமையான வெற்றியை பெற்று ஒருதலை பட்சமாக வெல்லும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது. அதே வேளையில் பாகிஸ்தான அணியை பொறுத்தவரை சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வியை தழுவி முத்தரப்பு தொடரை இழந்துள்ளது.

- Advertisement -

கடைசியாக நடைபெற்று முடிந்த பல தொடர்களை வைத்து புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தாலும் இந்திய அணி எவ்வளவு பலமான அணி என்று தெரியும். நான் வெளிப்படையாகவே சொல்கிறேன் இப்போது இருக்கும் பாகிஸ்தான் அணியை விட இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்த ஒன்று தான்.

இதையும் படிங்க : நியூசிலாந்து அணியால் நிச்சயம் இது முடியும்.. நம்பிக்கை தெரிவித்த முன்னாள் வீரர் டிம் சவுதி – விவரம் இதோ

பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், ரிஸ்வான் ஆகியோரை தவிர பெரிய வீரர்கள் வேறு யாரும் இல்லை. ஆனால் இந்திய அணியை பொறுத்த வரை கடைசி வரை அனைவருமே மிகச் சிறப்பான வீரர்களாக உள்ளனர். நிச்சயம் இந்திய அணி எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் வெகு எளிதாக இந்த போட்டியை கைப்பற்றும் என ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement