ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கு தரவரிசை பட்டியலில் முதல் எட்டு இடத்தில் இருக்கும் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை ஹைபிரிட் மாடல் முறையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது.
நியூசிலாந்து அணியால் நிச்சயம் இது முடியும் : டிம் சவுதி
மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேச ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரினை கைப்பற்றும் முனைப்புடன் அனைத்து அணிகளும் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இந்த தொடரின் முதலாவது போட்டி பிப்ரவரி 19-ஆம் தேதி கராச்சி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அந்த போட்டியில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
இந்நிலையில் எதிர்வரும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரினை கைப்பற்றும் அளவிற்கு நியூசிலாந்து அணி பலம் வாய்ந்த அணியாக உள்ளது என்றும் அந்த அணியால் கோப்பை கைப்பற்ற முடியும் என்றும் முன்னாள் நியூசிலாந்து வீரரான டிம் சவுதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
இந்த ஆண்டு நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மிட்சல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி பங்கேற்க இருக்கிறது. இந்த அணியில் அனுபவ வீரர்களும், திறமையான இளம் வீரர்களும் சரியான கலவையில் உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடரை கூட இந்த அணி வெற்றி பெற்றிருந்தது.
இதையும் படிங்க : முதல்நாள் பயிற்சியிலேயே பந்து தாக்கி காயமடைந்த ரிஷப் பண்ட்.. சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா?
ஐ.சி.சி தொடர்களில் எப்போதுமே சிறப்பாக செயல்பட்டு வரும் நியூசிலாந்து அணி இம்முறையும் நல்ல பேட்ஸ்மேன்களையும், பவுலர்களையும் வைத்திருப்பதால் நிச்சயம் இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் என்றும் கோப்பையை வெல்லும் என்றும் அதை தான் பார்க்க விரும்புவதாகவும் டிம் சவுதி கூறியது குறிப்பிடத்தக்கது.



