முதல்நாள் பயிற்சியிலேயே பந்து தாக்கி காயமடைந்த ரிஷப் பண்ட்.. சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா?

Pant
- Advertisement -

ஐசிசி சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி மூலம் நடத்தப்பட்டு வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரானது இதுவரை 8 சீசன்களை நிறைவு செய்துள்ள வேளையில் ஒன்பதாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற இருக்கிறது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணையும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தது.

பயிற்சியின் போது காயமடைந்த ரிஷப் பண்ட் :

குரூப் ஏ பிரிவில் நான்கு அணிகளும், பி பிரிவில் நான்கு அணிகளும் இடம்பிடித்து விளையாட இருக்கின்றன. ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் எட்டு இடத்தில் இருக்கும் அணிகள் விளையாடும் இந்த தொடர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

குரூப் சுற்றின் முடிவில் இரண்டு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கும், அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கும் தகுதிபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குரூப் ஏ பிரிவில் இந்திய அணியானது வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது.

அந்த வகையில் இந்திய அணி இந்த தொடரின் முதல் போட்டியில் பிப்ரவரி 20-ஆம் தேதி வங்கதேச அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இதன் காரணமாக தற்போது துபாய் சென்றடைந்துள்ள இந்திய வீரர்கள் ஐசிசி கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் பயிற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தொடருக்கான முதல் நாள் பயிற்சியின்போது ஹார்திக் பாண்டியா பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.

- Advertisement -

அப்போது ஹார்டிக் பாண்டியா அடித்த பந்து மைதானத்தில் நின்று கொண்டிருந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் மீது தாக்கியது. இதன் காரணமாக பந்து காலில் பட்டதும் வலியால் துடித்த பண்ட் மைதானத்திலேயே விழுந்து வலியால் துடித்தார். பின்னர் சிறிது நேரத்திலேயே உதவியாளர்கள் மூலம் ஓய்வறைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் ஐஸ் கட்டிகளை வைத்து முதலுதவி செய்து கொண்டார்.

இதையும் படிங்க : ஓஹோ இதுக்கு பேர் தான் பதிலடியா? இந்திய தேசியக் கொடியை புறக்கணித்த பாகிஸ்தான்.. ரசிகர்கள் அதிருப்தி

பின்னர் மீண்டும் களத்திற்கு திரும்பிய அவர் சிறிது நேரம் பேட்டிங் பயிற்சி செய்தாலும் காலில் அசவுகரியத்தை உணர்ந்தார். இருந்தாலும் ரிஷப் பண்ட்டுக்கு ஏற்பட்டுள்ள காயம் சில தினங்களில் சரியாகக்கூடிய ஒன்றுதான் என்றும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement