2012-ல் பெண்களை வைத்து இந்தியா எங்களை கவிழ்க்க நினைத்தது – புதிதாக உருட்டும் பாக் கிரிக்கெட் வாரிய சேர்மன்

IND vs PAK 2012
- Advertisement -

கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டிகள் என்றாலே அதில் எப்போதும் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. அண்டை நாடுகள் என்பதால் சாதாரண விளையாட்டு என்பதையும் தாண்டி கிரிக்கெட்டை ஒரு கௌரவப் பிரச்சனையாக கருதும் இந்த 2 நாடுகளும் மோதும் போட்டிகளில் இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் வெற்றி பெறுவதற்காக தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி முழுமூச்சுடன் போராடுவார்கள் என்பதால் அனல் தெறிக்கும். இருப்பினும் சமீப காலங்களாக இரு நாடுகளுக்கு இடையே நிலவும் எல்லைப் பிரச்சினை காரணமாக இந்த 2 அணிகளும் நேருக்கு நேர் கிரிக்கட் தொடர்களில் மோதுவதை அடியோடு விட்டு விட்டன.

INDvsPAK

- Advertisement -

இருந்தாலும் விளையாட்டில் அரசியலை பயன்படுத்தக் கூடாது என்பதற்காக இருநாடுகள் மோதும் கிரிக்கெட் தொடரை நடத்த இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தினாலும் அவை அனைத்தும் தோல்வியில்தான் முடிந்த வருகின்றன. அந்த வேளையில் ஐசிசி நடத்தும் உலக கோப்பை, ஆசிய கோப்பை போன்ற தொடர்களில் மட்டும் மோதுவதற்கு வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாய் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஆமாம் போட்டு வருகின்றன.

இந்தியா – பாகிஸ்தான்:
அதன் காரணமாக வருடத்திற்கு ஒருமுறை அல்லது 2 வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே ஐசிசி உலக கோப்பை போன்ற தொடர்களில் இந்த இரு அணிகளும் மோதுவதால் முன்பைவிட மவுசு கூடியுள்ளது இந்தியா – பாகிஸ்தான் போட்டியை பார்ப்பதற்கு உலகமே காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடைசியாக இவ்விரு அணிகளும் கடந்த 2012-ஆம் ஆண்டு ஒரு நேருக்கு நேர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றன.

yuvi

கடந்த 2012 டிசம்பர் மாதம் இந்திய மண்ணில் நிகழ்ந்த அந்த சுற்றுப்பயணத்தில் 2 டி20 போட்டிகளும் 3 ஒருநாள் போட்டிகளும் நடைபெற்றன. அதில் முதலாவதாக நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதியதால் 1 – 1 என தொடர் சமனில் முடிந்தது. ஆனால் அதன்பின் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிரடியாக செயல்பட்ட பாகிஸ்தான் 2 – 1 என்ற கணக்கில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து கோப்பையை வென்றது.

- Advertisement -

கவுக்க பார்த்த இந்தியா:
அந்த தொடருக்குப் பின் பாகிஸ்தானுக்கு இந்தியா செல்வதையும் இந்தியாவுக்கு பாகிஸ்தான் வருவதையும் அறவே தவிர்த்துள்ளன. இந்நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற அந்த தொடரின் போது அழகான பெண்களை வைத்து பாகிஸ்தான் வீரர்களை மயக்கி மண்ணைக் கவ்வ வைத்து வெற்றி பெற இந்தியா நினைத்ததாக அப்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மென் ஜாகா அஷ்ரப் ஒரு வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார். அதை தடுப்பதற்காக அந்த தொடரின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் மனைவிகளை அவர் அவர்களுடன் அனுப்பி வைத்ததாகவும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

இது பற்றி பாகிஸ்தானில் உள்ள பிரபல கிரிக்கெட் இணையதளத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய காலத்தில் இந்தியாவிற்குச் சென்றபொழுது பாகிஸ்தான் அணியில் இருந்த வீரர்கள் தங்களது மனைவிகளை அழைத்து செல்லுமாறு ஆலோசனை கொடுத்தேன். ஏனெனில் இந்திய ஊடகங்கள் அதுபோன்ற சம்பவங்கள் நடந்து விடுமா என அலைந்து கொண்டிருந்ததால் அதை தவிர்க்கும் வகையில் இந்த முடிவை எடுத்தோம். மனைவிகளை அந்தந்த வீரர்களை கண்காணித்து கொள்ளுமாறு நாங்கள் அறிவுறுத்தினோம்.

- Advertisement -

அதை தவறாக எடுத்துக் கொள்ளாத வீரர்களும் தங்களது மனைவிகளுடன் இந்தியாவிற்கு சென்று கட்டுக்கோப்புடன் நடந்து கொண்டார்கள். ஒவ்வொரு முறையும் நாங்கள் இந்தியாவுக்குச் செல்லும் போதெல்லாம் அவர்கள் எங்களை வலையில் விழ வைக்க முயற்சித்து எங்களது வீரர்களுக்கும் நாட்டிற்கும் களங்கத்தை ஏற்படுத்த நினைத்தனர். ஆனால் நாங்கள் அதை தவிர்த்து விட்டோம்” என கூறினார்.

worldcup

பொதுவாக வெளிநாடுகளுக்கு கிரிக்கெட் வீரர்கள் சென்று நாட்டுக்காக விளையாடும்போது தங்களது குடும்பத்தை பற்றிய எண்ணம் போட்டியில் வெளிப்பட்டு வெற்றியை பாதிக்கக் கூடாது என்பதற்காகவே அவர்களின் மனைவி குழந்தைகளை பெரும்பாலான தருணங்களில் அந்தந்த கிரிக்கெட் வாரியங்கள் அனுப்பி வைக்கும். ஆனால் பெண்களை வைத்து பாகிஸ்தான் வீரர்களை கவிழ்த்து அதன் வாயிலாக வெற்றி பெற ஒவ்வொரு முறையும் வேண்டுமென்றே இந்தியா முயற்சித்ததாக முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் கூறியதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் “இது என்னடா புது உருட்டு” என்பதுபோல் சமூக வலைதளங்களில் அவரை விளாசி வருகின்றனர்.

இதையும் படிங்க : ஒரு ரசிகனை போல சச்சினின் காலில் விழுந்த தெ.ஆ ஜாம்பவான்! ரசிகர்கள் வியக்கும் வீடியோ இதோ

ஏனெனில் அதற்கு முந்தைய 2011-ஆம் ஆண்டு தான் சொந்த மண்ணில் 28 ஆண்டுகள் கழித்து உலக கோப்பையை வென்ற இந்தியா பலமான அணியாக இருந்தது. அந்த மட்டுமல்லாமல் பெண்களை வைத்து வெற்றி பெறும் அளவுக்கு நாங்கள் ஒன்றும் உங்களை போல திறமை இல்லாத அணி கிடையாது என்று இப்படிப்பட்ட ஒரு கீழ்தரமான கருத்தை கூறிய அவரை இந்திய ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

Advertisement