ஒரு ரசிகனை போல சச்சினின் காலில் விழுந்த தெ.ஆ ஜாம்பவான்! ரசிகர்கள் வியக்கும் வீடியோ இதோ

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் மிகுந்த விறுவிறுப்புடன் வெற்றிகரமான 2-வது வாரத்தைக் கடந்து ரசிகர்களுக்கு திரில்லர் விருந்து படைத்து வருகிறது. இதில் தற்போது நடைபெற்று வரும் 70 போட்டிகள் கொண்ட முக்கியமான லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டு புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்க அனைத்து அணிகளும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஏனெனில் அப்போதுதான் அடுத்த சுற்றான பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று கோப்பையை கையில் எந்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

அந்த வகையில் இந்த வருடம் இதுவரை 23 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் ராஜஸ்தான், பஞ்சாப், பெங்களூரு போன்ற பெரிய அளவில் கோப்பைகளை வெல்லாத அணிகள் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் டாப் 4 இடங்களில் அசத்துகின்றன. அதேபோல் புதிய அணிகளான லக்னோ மற்றும் குஜராத் கூட 3 வெற்றிகளை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் நல்ல நிலைமையில் உள்ளது.

- Advertisement -

தடுமாறும் மும்பை:
ஆனால் அதிக கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் என பெயரெடுத்த நடப்புச் சாம்பியன் சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகள் பட்டியலில் கடைசி 2 இடங்களில் திண்டாடிக் கொண்டிருகின்றனர். தங்களது முதல் 4 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை பதிவு செய்து தவித்துக்கொண்டிருந்த இந்த அணிகளில் நேற்று முன்தினம் பெங்களூருவுக்கு எதிராக நடந்த 5-வது போட்டியில் அதிரடியாக செயல்பட்ட சென்னை முதல் வெற்றியை பதிவு செய்து நிம்மதியை பெற்றது. அதன் காரணமாக பொன்னான 2 புள்ளிகளை பெற்றுள்ள அந்த அணி புள்ளி பட்டியல் 9 இடத்திற்கு முன்னேறியது.

மறுபுறம் சென்னையை போலவே முதல் 4 போட்டிகளில் தோல்வி அடைந்த மும்பை நேற்று பஞ்சாப்க்கு எதிராக நடந்த தனது 5-வது போட்டியில் வெற்றிக்கு திரும்பும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் புனேவில் விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக 198/9 ரன்கள் குவித்தது.

- Advertisement -

காலில் விழுந்த ஜாம்பவான்:
அதை துரத்திய மும்பைக்கு தேவல்டு பிரேவிஸ், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி வெற்றிக்காக போராடிய போதிலும் ரோகித் சர்மா, கைரன் பொல்லார்ட் போன்ற முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறியதால் 20 ஓவர்களில் 186/9 ரன்களை மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. இதன் காரணமாக 5-வது தொடர் தோல்வியை பதிவு செய்துள்ள மும்பை தற்போது மீண்டும் புள்ளி பட்டியலில் கடைசி இடமான 10-வது தவித்து வருகிறது.

முன்னதாக புனேவில் உள்ள எம்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் பரபரப்பாக நடைபெற்ற அந்த போட்டி முடிந்த பின்னர் இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் பயிற்சியாளர்களும் கைகொடுத்து கொண்டனர். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆலோசகராக செயல்பட்டு வரும் இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் காலில் பஞ்சான் அணிக்காக ஃபீல்டிங் பயிற்சியாளராக செயல்படும் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் விழ வந்தது ரசிகர்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கியது.

- Advertisement -

கிரிக்கெட் கடவுள் சச்சின்:
நேற்றைய போட்டி முடிந்த பின் மும்பை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் வரிசையாக கைகொடுத்து கொண்டுவந்த ஜான்டி ரோட்ஸ் சச்சினை பார்த்ததும் கை கொடுக்காமல் நேராக அவரின் காலில் விழ சென்றதால் ஒரு நிமிடம் பதறி போன சச்சின் தனது காலில் அவர் விழக்கூடாத என்ற வகையில் அவரைத் தொட்டு தூக்க முயற்சித்து கடைசிவரை காலை தொட விடவில்லை. அதை தொடர்ந்து இறுதியில் 2 ஜாம்பவான்களும் கட்டி அனைத்து கொண்ட தருணம் பார்த்து அனைத்து ரசிகர்களையும் புல்லரிக்க வைத்தது.

சர்வதேச கிரிக்கெட்டில் பல ஆயிரம் ரன்களை குவித்த சச்சின் ஒரு மாபெரும் மகத்தான பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். அதிலும் 16 வயதில் காலடி வைத்து வாசிம் அக்ரம் போன்ற உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை எதிர்கொண்டு 100 சதங்களை விளாசி இந்தியாவிற்காக பல சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவரை இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்கள் போற்றி வருகின்றனர்.

- Advertisement -

அதன் காரணமாகவே அவர் விளையாடிய பல தருணங்களில் பாதுகாப்பையும் மீறி மைதானத்திற்குள் நுழைந்த பல ரசிகர்கள் அவரின் காலில் விழுந்து ஆசியையும் அன்பையும் பெற்றார்கள்.

இதையும் படிங்க : கப்ப விடுங்க இதை பாருங்க ! மும்பையை ஓவர்டேக் செய்யும் சென்னை – உண்மையான வெற்றிகரமான அணி எது?

ஆனால் உலக கிரிக்கெட்டில் தரமான பீல்டிங் என்றால் என்ன என்பதை உணர்த்தி சச்சினுக்கு நிகரான ஜாம்பவானாக கருதப்படும் ஜான்டி ரோட்ஸ் ஒரு ரசிகரை போல சச்சினின் காலில் விழுந்தது பல ரசிகர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மொத்தத்தில் என்னதான் ஜாம்பவானாக இருந்தாலும் ஒரு சாதாரண ரசிகனை போல சச்சினின் காலில் விழ முயன்ற ஜான்டி ரோட்ஸ் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement