கப்ப விடுங்க இதை பாருங்க ! மும்பையை ஓவர்டேக் செய்யும் சென்னை – உண்மையான வெற்றிகரமான அணி எது?

MI vs CSK
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமான 2-வது வாரத்தை கடந்து பல விறுவிறுப்பான த்ரில் தருணங்களுடன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. தற்போது நடைபெற்று வரும் 70 போட்டிகள் கொண்ட லீக் தொடரில் அபாரமாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்க அனைத்து அணிகளும் முழு மூச்சுடன் போராடி வருகின்றன. அந்த வகையில் பஞ்சாப், டெல்லி, பெங்களூரு ஏன் இன்று புதிதாக உருவாக்கி விளையாடி வரும் லக்னோ, குஜராத் போன்ற அணிகள் கூட அடுத்தடுத்த வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் டாப் இடங்களில் ஜொலிக்கின்றன.

IPL 2022 (2)

- Advertisement -

ஆனால் காலம் காலமாக அதிரடியாக விளையாடி மலைபோல வெற்றிகளை குவித்து நிறைய கோப்பைகளை முத்தமிட்டு வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் என பெயரெடுத்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் தங்களது முதல் 4 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடங்களில் திண்டாடுவது அந்த அணி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மீண்டெழ போவது யார்:
இதில் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரவீந்திர ஜடேஜா தலைமையில் முதல் 4 போட்டிகளில் தோல்விகளை சந்தித்த போதிலும் பெங்களூருக்கு எதிரான 5-வது போட்டியில் கொதித்தெழுந்த சென்னை அதிரடியாக விளையாடி முதல் வெற்றியை பதிவு செய்து நிம்மதி பெற்றுள்ளது. அதில் கிடைத்த பொன்னான 2 புள்ளிகளை வைத்து 10-வது இடத்தில் திண்டாடிக் கொண்டிருந்த அந்த அணி 9-வது இடத்திற்கு முன்னேறி வெற்றிப் பாதைக்கு திரும்பி உள்ளது.

CSKvsMI

ஆனால் சென்னைக்கு தோள்கொடுக்கும் தோழனாக முதல் 4 போட்டிகளில் தோல்வி அடைந்த மும்பை பஞ்சாப்க்கு எதிரான 5-வது போட்டியில் சென்னையில் போலவே வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில் படுமோசமாக செயல்பட்டு மீண்டும் தோல்வி அடைந்தது. அதன் காரணமாக 9-வது இடத்தில் இருந்த மும்பை தற்போது 10-வது இடத்தில் திண்டாடி வருகிறது. எது எப்படி இருந்தாலும் இந்த 2 அணிகளுமே தற்போது புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களில் திணறும் நிலையில் இதிலிருந்து மீண்டெழுந்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்களிடம் காணப்படுகிறது.

- Advertisement -

வெற்றிகரமான அணி எது:
ஒருவேளை இந்த இரு அணிகளுமே இதே போல செயல்பட்டு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் தோல்வி அடைந்தாலும் கூட ஐபிஎல் வரலாற்றில் டாப் 2 வெற்றிகரமான அணிகளாக மும்பையும் சென்னையும் தான் தொடர்ந்து நீடிக்கும். ஏனெனில் 5 கோப்பைகளை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் வெற்றிகரமான ஐபிஎல் அணியாகவும் 4 கோப்பைகளை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிகரமான 2-வது அணியாகவும் சாதனை படைத்துள்ளன.

CskvsMi

தற்போது விஷயம் என்னவெனில் இந்தியா பாகிஸ்தானை போல ஐபிஎல் தொடரில் பரம எதிரிகளாக கருதப்படும் இந்த இரு அணிகளில் சிறந்தவர் யார் என்ற கேள்வி எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதற்காக களத்தில் அந்த 2 அணிகளைச் சேர்ந்த வீரர்கள் சண்டை போட்டுக்கொள்வார்கள் என்றால் சமூக வலைதளங்களில் நாங்கள்தான் பெரியவர் என்பது போல் இரு அணிகளைச் சேர்ந்த ரசிகர்களும் மல்லு கட்டுவார்கள். அப்படிப்பட்ட நிலையில் கோப்பைகளின் அடிப்படையில் அதிக கோப்பைகளை வென்றுள்ள மும்பை தான் வெற்றிகரமான ஐபிஎல் அணி என அனைவராலும் போற்றப்படுகிறது. ஆனால் நிறைய கிரிக்கெட் வல்லுனர்களும் ஜாம்பவாங்களும் ஒரு அணியை அது பதிவு செய்த வெற்றி சராசரியின் அடிப்படையில் கணக்கிடுவார்கள். அந்த வகையில் போட்டி வெற்றிகளை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது சென்னை தான் வெற்றிகரமான ஐபிஎல் அணியாக முதலிடத்தில் வருகிறது. அதை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. அதாவது ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை மொத்தம் 222 போட்டிகளில் பங்கேற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அதில் 127 வெற்றிகளையும் 95 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. அந்த வகையில் அந்த அணியின் வெற்றி சராசரி விகிதம் 57.2% ஆகும்.

Csk-vsMi

2. மறுபுறம் இதுவரை 200 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அதில் 118 வெற்றிகளையும் 81 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. அந்த அணியின் வெற்றி சராசரி விகிதம் 59.54% ஆகும்.

- Advertisement -

3. எனவே கோப்பையை விட்டுவிட்டு வெற்றி சராசரி அடிப்படையில் பார்க்கும்போது சென்னைதான் வெற்றிகரமான ஐபிஎல் அணி என்று புள்ளிவிவரங்கள் அடிப்படையில் சென்னை ரசிகர்கள் காலரை தூக்குகின்றனர்.

இதையும் படிங்க : தற்போதைய டெஸ்ட் கிரிக்கெட்டின் டாப் 5 டெஸ்ட் பேட்டர்கள் இவர்கள் தான் – ஷேன் வாட்சன் தேர்வு

4. மேலும் சூதாட்ட சர்ச்சையில் சிக்கியதால் கடந்த 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் சென்னை அணி ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. ஒருவேளை அந்த 2 வருடங்களும் சென்னை விளையாடி இருந்தால் மும்பையை விட இன்னும் கூட அதிக வெற்றிகளையும் சராசரியையும் பெறுவதுடன் கூடுதலாக ஒரு சில கோப்பைகளையும் பெற்றிருக்கும் என சென்னை ரசிகர்கள் கூறுகின்றனர்.

Advertisement