தற்போதைய டெஸ்ட் கிரிக்கெட்டின் டாப் 5 டெஸ்ட் பேட்டர்கள் இவர்கள் தான் – ஷேன் வாட்சன் தேர்வு

Watson-1
Advertisement

கிரிக்கெட்டில் தங்களின் அபார திறமையால் எதிரணி பவுலர்களை பந்தாடி தனது அணிக்கு வெற்றியை தேடி தரும் வீரர்களை தரமான பேட்டர்கள் என்று ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அதிலும் உலகின் எந்த ஒரு இடத்திலும் கடினமான சூழ்நிலைகளிலும் கூட உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை அற்புதமாக எதிர்கொண்டு ரன் மழை பொழியும் வீரர்களே உலகத்தரம் வாய்ந்தவர்களாக போற்றப்படுகிறார்கள். ஒவ்வொரு தலைமுறையிலும் நிறைய வீரர்கள் தங்கள் நாட்டுக்காக விளையாடினாலும் கூட ஒரு சில வீரர்கள் மட்டுமே உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக உருவாகி எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து தனது நாட்டுக்கு வெற்றியைத் தேடித் தருவார்கள்.

அந்த வகையில் இந்த நவீன கிரிக்கெட்டில் ஒருநாள், டி20 போன்ற போட்டிகளின் வருகையால் கிரிக்கெட் என்பது அதிரடி சரவெடியாக பவுண்டரிகளும் சிக்ஸர்களும் பறக்கும் ஒரு விளையாட்டாக மாறி வருகிறது. இருப்பினும் கூட நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இன்றும் ரசிகர்களிடையே மவுசு குறையவில்லை என்றே கூறலாம்.

- Advertisement -

டாப் 5 டெஸ்ட் பேட்டர்கள்:
ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட் தான் ஒரு பேட்டரின் உண்மையான திறமையையும் பொறுமையையும் தன்மையையும் சோதிக்கும் போட்டியாகும். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் டி20 கிரிக்கெட்டில் வெறும் 30 பந்துகளில் சதம் அடித்து விடலாம். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 பந்துகளை எதிர்கொள்வது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல.

இப்படிப்பட்ட நிலையில் உலக அளவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தற்போது ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன், இந்தியாவின் விராட் கோலி இங்கிலாந்தின் ஜோ ரூட் போன்ற ஒரு சில வீரர்கள் மட்டுமே உலகின் எந்த ஒரு இடத்திலும் அபாரமாக செயல்படும் திறமையை பெற்றுள்ளதால் உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. அதிலும் இந்த 4 வீரர்களை சேர்த்து “பேப் 4” என ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களாக அபாரமாக செயல்பட்டு வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள பாகிஸ்தானின் பாபர் அசாம் இந்தப் பட்டியலில் தாமும் இருக்க தகுதியானவன் என்று அடிக்கடி நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.

- Advertisement -

அதன் காரணமாக இந்த 5 வீரர்களில் இவர் உலகத்தரம் வாய்ந்த டெஸ்ட் பேட்டர் என முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் அவ்வப்போது விவாதங்கள் செய்வது உண்டு. அந்த வகையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் தற்போதைய டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது டாப் 5 பேட்டர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். இது பற்றி 5 வீரர்களையும் வரிசைப்படி பட்டியலிட்டுள்ள அவர் ஐசிசி அதிகாரபூர்வ பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

1. விராட் கோலி: டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதுமே நான் விராட் கோலியை தேர்வு செய்வேன். அவர் கிட்டத்தட்ட ஒரு சூப்பர் மனிதனை போன்றவர். ஏனெனில் ஒவ்வொரு போட்டியில் அவர் களமிறங்க செல்லும் போதும் முழு மூச்சுடன் விளையாட வேண்டும் என நினைப்பார்.

- Advertisement -

2. பாபர் அசாம்: பாபர் அசாம் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாட தன்னை மிக விரைவாக மாற்றிக் கொண்டதை பார்க்க ஆச்சரியமாக உள்ளது. எனவே தற்போதைய நிலைமையில் அவர் 2-வது இடத்தில் உள்ளார்.

3. ஸ்டீவ் ஸ்மித்: ஸ்டீவ் ஸ்மித் சற்று தாமதமாக வருகிறார். சமீபகாலங்களாக அவர் சிறப்பாக துவங்குவதற்கு சற்று நேரம் எடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல் பந்து வீச்சாளர்கள் மீது அவர் போடும் அழுத்தம் என்பது ஏற்கனவே அவர் நிரூபித்ததை விட குறைந்துள்ளது. எனவே என்னுடைய இந்த பட்டியலில் அவர் சரிந்துள்ளார்.

- Advertisement -

4. கேன் வில்லியம்சன்: வில்லியம்சனுக்கு ஒரு சில எல்போ காயம் சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தன. இருப்பினும் உலகின் எந்த ஒரு கால சூழ்நிலையிலும் எதிரணி பவுலர்கள் மீது எப்படி அழுத்தத்தை போட வேண்டும் என்பதை பற்றி அவர் நன்கு தெரிந்து வைத்துள்ளார்.

5. ஜோ ரூட்: சமீப கலங்கலாக ஜோ ரூட் ஒருசில சதங்களை அடித்து சிறப்பாக செயல்பட்டாலும் அவரும் ஸ்டீவ் ஸ்மித்தை போல ஒரு நல்ல ஸ்கோரை அடைந்த பிறகு அதை விட பெரிய ஸ்கோரை சேர்க்க முடிவதில்லை. ஆனால் கடந்த காலங்களில் அதை அவர் அபாரமாக செய்தார்.

என ஷேன் வாட்சன் தெரிவித்தார். அவரின் இந்த பட்டியலைப் பார்க்கும் பலர் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளார் என்று கூறலாம். ஏனெனில் தனது நாட்டை சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித்தை அவர் முதலிடத்தில் தேர்வு செய்யவில்லை என்பது ஒன்று. மற்றொன்று என்னதான் விராட் கோலி 3 வகையான கிரிக்கெட்டிலும் 50க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரி வைத்து மகத்தான பேட்ஸ்மேனாக இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட் என குறிப்பிட்டு பார்க்கும் போது அவரை விட ஸ்டீவ் ஸ்மித் தான் சிறந்த பேட்ஸ்மென் என பல இந்திய ரசிகர்களே சமூக வலைதளங்களில் பேசுகின்றனர்.

Advertisement