
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 35-வது லீக் போட்டியானது இன்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன.
அதன்படி நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழந்து 264 ரன்கள் குவித்தது. டெல்லி அணி சார்பாக அதிகபட்சமாக கே.எல் ராகுல் 152 ரன்களையும், நிதீஷ் ராணா 91 ரன்களையும் குவித்தனர்.
அதனைத்தொடர்ந்து தற்போது 265 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியானது விளையாடி வருகிறது. இந்நிலையில் இன்றைய போட்டியின் போது 265 என்கிற மாபெரும் இலக்கினை துரத்தி விளையாடி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணியானது முதல் 6 ஓவர்களின் முடிவில் அதாவது பவர்பிளேவில் 116 ரன்கள் குவித்து அசத்தியது.
அதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் பவர்பிளே ஓவர்களில் அதிக ரன்கள் அடித்த அணியாக முதலிடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு (125) அடுத்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் பவர்பிளே ஓவர்களில் 110 ரன்களுக்கு மேல் குவித்த இரண்டாவது அணியாகவும் பஞ்சாப் அணி இந்த போட்டியின் மூலம் சாதனை நிகழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க : ஒரே போட்டியில் எம்.எஸ் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவை ஓரங்கட்டிய கே.எல் ராகுல் – டாப் 5ல் வந்து அசத்தல்
இந்த போட்டியின் ஆரம்பத்திலேயே பஞ்சாப் அணியின் துவக்க வீரர்கள் முதல் 6 ஓவர்களில் ஆட்டமிழக்காமல் 116 ரன்களை அடித்ததுள்ளதால் நிச்சயம் வெற்றியை நோக்கி அந்த அணி நகரவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.