- Advertisement -
ஐ.பி.எல்

ஜெயிச்சதோடு மட்டுமில்லாமல் அகமதாபாத் மைதானத்தில் சாதனையையும் நிகழ்த்திய – பஞ்சாப் கிங்ஸ்

இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது லீக் ஆட்டமானது நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அகமதாபாத் மைதானத்தில் சாதனை நிகழ்த்திய பஞ்சாப் கிங்ஸ் :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது. இந்த போட்டியின் போது பஞ்சாப் அணி சார்பாக ஷ்ரேயாஸ் ஐயர் 97 ரன்களையும், பிரியான்ஸ் ஆர்யா 47 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

அதனை தொடர்ந்து 244 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது 232 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்ததால் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. நேற்று இந்த போட்டியில் சொந்த மைதானத்தில் விளையாடும் குஜராத் அணி தான் பலமான அணியாக இருக்கும் என்று பலராலும் பேசப்பட்டது.

ஆனால் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியானது குஜராத் அணியின் பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கி துவக்கத்திலிருந்து போட்டியில் ஆதிக்கத்தை செலுத்தியது. அதோடு பந்துவீச்சின் போதும் இறுதி நேரத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றியினை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த போட்டியின் போது பஞ்சாப் கிங்ஸ் அணி அஹமதாபாத் மைதானத்தில் ஒரு மாபெரும் சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஒரு டி20 போட்டியில் அதிக ரன்கள்(243) குவித்த அணியாக தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணி முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது இந்திய அணி இந்த மைதானத்தில் 234 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாக இருந்த வேளையில் அந்த சாதனையை தற்போது முறியடித்து புதிய சாதனையை பஞ்சாப் கிங்ஸ் அணி நிகழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க : இவரெல்லாம் ஒரு கேப்டனா.. அவரால் தான் குஜராத் அணி தோற்றது.. சுப்மன் கில்லை சாடிய – விரேந்தர் சேவாக்

கடந்த ஆண்டு கொல்கத்தா அணியை வெற்றிகரமாக வழிநடத்தி சாம்பியன் பட்டத்தை வென்று தந்த ஷ்ரேயாஸ் ஐயர் இம்முறை பஞ்சாப் அணிக்கு கேப்டனாக மாறியுள்ளார். எனவே நிச்சயம் பஞ்சாப் அணி இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று பலராலும் நம்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -