ஏலதாரர் செய்த மெகா சொதப்பல்.. ஏமாற்றப்பட்ட பஞ்சாப்.. ப்ரீத்தி ஜிந்தாவுக்கு நேர்ந்த பரிதாபம்.. நடந்தது என்ன?

Prity Zinta
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் தாக்கூர், ரச்சின் ரவீந்தரா, டார்ல் மிட்சேல் போன்ற வீரர்களை நல்ல தொகைக்கு வாங்கி தங்களுடைய அணியை பலப்படுத்தியது. அந்த வகையில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஏலத்தில் பிரபல பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா துணை உரிமையாளராக இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி கடைசி நேரத்தில் சில உள்ளூர் வீரர்களை குறைந்த விலைக்கு வாங்க முயற்சித்தது.

அப்போது அசுடோஸ் சர்மா எனும் இந்திய உள்ளூர் வீரரை 20 லட்சம் என்ற அடிப்படை விலைக்கு வாங்கிய பஞ்சாப் அடுத்ததாக விஸ்வநாத் பிரதாப் சிங் எனும் மற்றொரு வீரரை 20 லட்சத்திற்கு வாங்க முயற்சித்தது. குறிப்பாக அந்த வீரரின் பெயர் வந்ததும் பிரீத்தி ஜிந்தா சிரித்து முகத்துடன் தங்களுக்கு வேண்டும் என்று ஏலம் கேட்டார்.

- Advertisement -

அதை ஏற்றுக் கொண்ட ஏலதாரர் மல்லிகா சாகர் மற்ற அணிகள் யாருக்காவது வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு எந்த அணியும் விருப்பம் தெரிவிக்காத நிலையில் “விரைவில் சுத்தியலை கீழே அடிக்கப் போகிறேன் யாராவது வேண்டுமானால் கேளுங்கள்” என்று மீண்டும் மல்லிகா சாகர் கேட்டுக்கொண்டார். ஆனால் அப்படி கேட்ட அவர் மேஜையில் சுத்தியலை அடித்து சாசங்க் சிங்கை பஞ்சாப் அணிக்கு கொடுப்பதை மறந்துவிட்டு அடுத்த செட்டில் முதலாவதாக இருந்த சாசங்க் சிங் எனும் வீரரின் பெயரை ஏலம் கேட்க துவங்கினார்.

அதனால் குழப்பமடைந்த பிரீத்தி ஜிந்தா மற்றும் பஞ்சாப் அணி நிர்வாகிகள் முதலில் தாங்கள் கேட்ட வீரரை கொடுங்கள் என்று கேட்டதுடன் சாசங்க் சிங் பெயரை ரத்து செய்யுமாறு கேட்டனர். ஆனால் அப்போது “அது தவறான பெயரா? உங்களுக்கு அந்த வீரர் வேண்டாமா? நாம் சாசங்க் சிங்கை பற்றி பேசுகிறோம். ஆனால் சுத்தியல் ஏற்கனவே கீழே வைக்கப்பட்டு விட்டது. அதனால் நம்பர் 237, 238 ஆகிய 2 வீரர்களும் உங்கள் அணியில் சேர்க்கப்படுகிறார்கள்” என்று அறிவித்தார்.

- Advertisement -

அதற்கு ப்ரீத்தி ஜிந்தா உள்ளிட்ட பஞ்சாப் அணியினர் எதிர்ப்பு தெரிவித்தும் “சுத்தியல் கீழே வைக்கப்பட்டு விட்டதால் 237வது வீரரும் உங்களுடைய அணிக்கு சேர்வார்” என்று மல்லிகா சாகர் மீண்டும் அறிவித்தார். அதனால் விஸ்வநாத் பிரதாப் சிங்கை மட்டும் வாங்க முயற்சித்த பஞ்சாப் தலையில் சசாங்க் சிங் 32 வயதாகும் வீரரையும் மல்லிகா சாகர் கட்டி விட்டார்.

இதையும் படிங்க: 10 வருஷமா அவரோட ஆட்டத்தை பாத்து ரசிச்சிருக்கேன்.. இப்போ அவர்கூடவே ஆட போறேன் – தமிழக வீரர் ஷாருக்கான் மகிழ்ச்சி

குறிப்பாக அந்த இடத்தில் 19 மற்றும் 32 ஆகிய வயதில் சாசங்க் சிங் என்ற ஒரே பெயரில் 2 வீரர்கள் விண்ணப்பித்திருந்ததால் ஏலதாரர் குழப்பமடைந்து இந்த தவறு ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த வகையில் ப்ரீத்தி ஜிந்தா மற்றும் பஞ்சாப் அணி நிர்வாகம் தேவையின்றி 20 லட்சம் கொடுத்து எக்ஸ்ட்ரா வீரரை வாங்கும் அளவுக்கு சொதப்பலாக செயல்பட்ட ஏலதாரர் மல்லிகா சாகர் மீது ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement