10 வருஷமா அவரோட ஆட்டத்தை பாத்து ரசிச்சிருக்கேன்.. இப்போ அவர்கூடவே ஆட போறேன் – தமிழக வீரர் ஷாருக்கான் மகிழ்ச்சி

Shahrukh
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக நேற்று டிசம்பர் 19-ஆம் தேதி துபாயில் வீரர்களுக்கான மினி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் திறமையான வீரர்களை வாங்க பல்வேறு அணிகளும் கடுமையான போட்டியை வெளிப்படுத்தினர். மொத்தம் 333 வீரர்கள் கலந்து கொண்ட இந்த ஏலத்தில் 70-திற்கும் மேற்பட்ட வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.

வெளிநாட்டு வீரர்களை தவிர்த்து உள்நாட்டு வீரர்களில் இந்திய அணிக்காக விளையாடாத சில வீரர்களும் பெரிய தொகைக்கு ஏலத்தில் சென்று கவனத்தை ஈர்த்தனர். அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த இளம் அதிரடி வீரரான ஷாருக் கான் 7.40 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

- Advertisement -

கடந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடிய அவர் பினிஷர் ரோலில் இறங்கி அதிரடியாக விளையாடியிருந்தாலும் அவரை அந்த அணியின் நிர்வாகம் வெளியேற்றி இருந்தது. இந்நிலையில் ஷாருக்கானை விடாப்படியாக தங்களது அணியில் எடுக்க போராடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது இறுதியில் 7.40 கோடிக்கு தங்கள் அணிக்காக விலைக்கு வாங்கியது.

ஹார்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக டிரேடிங் செய்யப்பட்டுள்ளதால் பின்வரிசையில் அதிரடியாக விளையாடும் ஒரு வீரராக ஷாருக்கானை குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை அணியில் எடுத்துள்ளது. இந்நிலையில் முதல்முறையாக குஜராத் அணிக்காக விளையாடப்போவது குறித்து பேசியுள்ள ஷாருக்கான் கூறுகையில் :

- Advertisement -

நான் கடந்த 10 வருடமாக டேவிட் மில்லரின் பெரிய ரசிகன். அவர் விளையாடும் விதம், போட்டியை முடித்துக் கொடுக்கும் விதம் என அனைத்துமே எனக்கு மிகவும் பிடிக்கும். இக்கட்டான பெரிய போட்டிகளை கூட டேவிட் மில்லர் கூலாக முடித்துக் கொடுப்பார். அதோடு ஐ.பி.எல் போட்டிகளிலும் சரி, தென்னாப்பிரிக்க அணிக்காகவும் சரி பல போட்டிகளை அவர் முடித்து கொடுத்துள்ளார். இப்படிப்பட்ட ஒரு மகத்தான பினிஷருடன் நான் ஒன்றாக விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளதில் மிகவும் மகிழ்ச்சி.

இதையும் படிங்க : மொத்தம் 108 சிக்ஸ்.. உலக சாதனை படைத்த டி20 தொடர்.. வெ.இ அணியை துவம்சம் செய்த இங்கிலாந்து மாஸ் கம்பேக்

அடுத்த தொடரில் குஜராத் அணிக்காக விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன். குஜராத் அணி என்னை ஆறாவது அல்லது ஏழாவது இடத்தில் களமிறக்கும் என்று நம்புகிறேன். அந்த இடத்தில் எனது வேலையை சரியாக செய்து கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது. அதோடு பகுதி நேரத்தில் பந்துவீச வாய்ப்பு தரப்பட்டாலும் அதிலும் சிறப்பாக செயல்படுவேன் என ஷாருக்கான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement