CSK vs PBKS : கடைசி பந்து வரை போராடி வெற்றியை பரிசளித்த சிஎஸ்கே – சேப்பாக்கத்தில் பஞ்சாப் வரலாற்று வெற்றி பெற்றது எப்படி

- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 30ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 41வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற சென்னை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு டேவோன் கான்வேயுடன் இணைந்து பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி 10 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 86 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்சிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த ருதுராஜ் கைக்வாட் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 37 (31) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அந்த நிலைமையில் அதிரடியாக விளையாடுவதற்காக களமிறங்கிய சிவம் துபே 2வது விக்கெட்டுக்கு 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 1 பவுண்டரி 2 சிக்சருடன் 28 (17) ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்து வந்த மொய்ன் அலி அதிரடியாக விளையாட முயற்சித்து 2 பவுண்டரியுடன் 10 (6) ரன்கள் அவுட்டாக மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட டேவோன் கான்வே அரை சதமடித்து சென்னையை வலுப்படுத்தினார். இருப்பினும் அடுத்ததாக களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா பவுண்டரி அடிக்காமல் தடுமாற்றமாக செயல்பட்டு 12 (10) ரன்களில் கடைசி ஓவரில் அவுட்டானார்.

- Advertisement -

ஆனாலும் கடைசி நேரத்தில் 2 சிக்ஸர்களை பறக்க விட்ட தோனி 13* (4) ரன்களுடன் நல்ல ஃபினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் சென்னை 200/4 ரன்கள் எடுத்தது. அதற்கு ஆரம்பம் முதலே சென்னை வெயிலில் அசராமல் பேட்டிங் செய்த டேவோன் கான்வே 16 பவுண்டரி 1 சிக்சருடன் 92* (52) ரன்கள் எடுத்து நல்ல அடித்தளமிட்டார். அதைத்தொடர்ந்து 201 ரன்களை துரத்திய பஞ்சாப்புக்கு பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 50 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் சிகர் தவான் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 28 (15) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் அதிரடியாக விளையாடிய பிரப்சிம்ரன் சிங் 4 பவுண்டர் 2 சிக்சருடன் 42 (24) ரன்களில் ஜடேஜா சுழலில் தோனியின் ஸ்டம்பிங்கில் அவுட்டானார்.

அந்த நிலைமையில் வந்த அதர்வா டைட் தடுமாறி 13 (17) ரன்களில் அவுட்டானதால் 94/3 என பஞ்சாப் தடுமாறியது. இருப்பினும் அப்போது ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடிய லியாம் லிவிங்ஸ்டன் 4வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 1 பவுண்டரி 4 சிக்சர்களை பறக்க விட்டு 40 (24) ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். அவருடன் மறுபுறும் அதிரடியாக விளையாடிய சாம் கரண் 1 பவுண்டரி 1 சிக்சருடன் அடுத்த சில ஓவர்களில் 29 (20) ரன்களில் அவுட்டானாலும் அடுத்து வந்த ஜிதேஷ் சர்மா பவுண்டரிகளை பறக்க விட்டதால் வெற்றியை நெருங்கிய பஞ்சாப்புக்கு கடைசி 2 ஓவரில் 22 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

- Advertisement -

துஷார் தேஷ்பாண்டே வீசிய அந்த ஓவரில் முதல் பந்தில் பவுண்டரி அடித்த அவர் 4வது பந்தில் சிக்ஸர் அடிக்கும் முயற்சித்த போது சப்ஸ்டிடியூட் வீரராக வந்த சாய்க் ரசித் எளிதான கேட்ச் பிடித்தார். இருப்பினும் பவுண்டரி எல்லையில் உரசுவது போல் சென்றதால் அதை சோதித்துப் பார்த்த 3வது நடுவர் சில நூலிழை இடைவெளி இருந்ததால் அவுட் வழங்கியதால் ஜிதேஷ் சர்மா 21 (10) ரன்களில் அவுட்டாகி சென்றார். அதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அடுத்து வந்த சிக்கந்தர் ராசா அடுத்த பந்தில் பவுண்டரி அடித்தார்.

அதனால் மதிசா பதிரனா வீசிய கடைசி ஓவரின் பஞ்சாப் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்தில் சிக்கந்தர் ராசா சிங்கிள் எடுக்க 2வது பந்தில் ஷாருக்கான் சிங்கள் எடுத்தார். 3வது பந்தில் பதிரனா ரன்கள் கொடுக்காத நிலையில் 4, 5வது பந்துகளில் சிக்கந்தர் ராசா அடுத்தடுத்து டபுள் எடுத்து கடைசி பந்தில் தேவைப்பட்ட 3 ரன்களையும் வெற்றிகரமாக எடுத்தார்.

- Advertisement -

அதனால் 20 ஓவரில் 201/6 ரன்கள் எடுத்த பஞ்சாப் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னைக்கு எதிராக சேப்பாக்கத்தில் அதிகபட்ச ஸ்கோரை வெற்றிகரமாக சேசிங் சாதனை வெற்றி பெற்றது. சென்னை சார்பில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளை எடுத்தும் 49 ரன்களை வாரி வழங்கியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இதையும் படிங்க: வீடியோ : கொளுத்திய வெயிலில் அசராமல் அடித்த கான்வே, இக்கட்டான நேரத்தில் அடுத்தடுத்த சிக்ஸருடன் ஃபினிஷிங் கொடுத்த தல தோனி

அதே போல் சிறப்பான தொடக்கத்தை பெற்றதால் 210 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சென்னை பேட்டிங்கில் ரவீந்திர ஜடேஜா பவுண்டரி அடிக்காமல் 12 (10) ரன்கள் மட்டுமே எடுத்ததால் அந்த எக்ஸ்ட்ரா ரன்களை எடுக்கும் வாய்ப்பை இழந்து தோற்றது.

Advertisement