வீடியோ : கொளுத்திய வெயிலில் அசராமல் அடித்த கான்வே, இக்கட்டான நேரத்தில் அடுத்தடுத்த சிக்ஸருடன் ஃபினிஷிங் கொடுத்த தல தோனி

- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 30ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 41வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. அதில் கடந்த போட்டியில் ராஜஸ்தானிடம் தோல்வியை சந்தித்ததால் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய சூழ்நிலையில் களமிறங்கிய சென்னை டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய சென்னைக்கு ருதுராஜ் கைக்வாட் – டேவோன் கான்வே ஆகியோர் வழக்கம் போல பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அதிரடியாகவும் விரைவாகவும் ரன்களை சேர்த்து சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.

அதில் கடந்த போட்டியில் மெதுவாக விளையாடி பின்னடைவை கொடுத்த கான்வே இம்முறை அதிரடி காட்டிய நிலையில் மறுபுறம் அவருக்கு கம்பெனி கொடுக்கும் வகையில் சற்று மெதுவாக பேட்டிங் செய்த ருதுராஜ் 10 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 86 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்சிப் அமைத்து 4 பவுண்டரி 1 சிக்சருடன் 37 (31) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் அதிரடியாக விளையாடுவதற்காகவே வந்த சிவம் துபே 1 பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்டு கான்வேயுடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 28 (17) ரன்கள் விளாசி தனது வேலையை செய்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக செயல்பட்ட டேவோன் கான்வே அரை சதமடித்த நிலையில் எதிர்ப்புறம் வந்த மொயின் அலி அதிரடியாக விளையாட முயற்சித்து 2 பவுண்டரியுடன் 10 (6) ரன்களில் அவுட்டாகி சென்றார். அதை தொடர்ந்து களமிறங்கிய ஜடேஜா பவுண்டரிகள் அடிக்க தடுமாறி கடைசி ஓவரில் 12 (10) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார். அந்த நிலைமையில் களமிறங்கிய கேப்டன் எம்எஸ் தோனி 4 பந்துகளை 2 சிக்ஸர்களை தெறிக்க விட்டு 13* ரன்களை விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.

குறிப்பாக ஆரம்பக்கட்ட அதிரடி ஆட்டத்தால் 210 ரன்களைத் தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சென்னை ஜடேஜாவின் கடைசி நேரம் தடுமாற்றமான ஆட்டத்தால் 19.4 ஓவரில் 188 என தடுமாறியது. அதனால் சென்னை 200 ரன்கள் தொடுமா என்று ரசிகர்கள் கலக்கமடைந்த போது சாம் கரண் வீசிய கடைசி ஓவரின் கடைசி 2 பந்துகளில் சிக்சர்களை பறக்க விட்ட தோனி சென்னை ரசிகர்களை மகிழ்வித்து 20 ஓவரில் 200/4 ரன்கள் எடுக்க உதவினார்.

- Advertisement -

அவரது சிக்சர்களுக்காக காத்திருந்த சென்னை ரசிகர்கள் அதை அடித்ததும் மெரினா கடற்கரைக்கு கேட்கும் அளவுக்கு விண்ணதிர முழங்கி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால் அவை அனைத்திற்கும் சென்னையில் கொளுத்திய வெயிலில் தொடர்ந்து சிறப்பான எனர்ஜியுடன் பேட்டிங் செய்து அபாரமான அடித்தளமிட்ட டேவோன் கான்வே 16 பவுண்டரி 1 சிக்சருடன் 92* (52) ரன்களை விளாசி பெரிய ஸ்கோரை எடுக்க உதவினார்.

இதையும் படிங்க:வீடியோ : கொளுத்திய வெயிலில் அசராமல் அடித்த கான்வே, இக்கட்டான நேரத்தில் அடுத்தடுத்த சிக்ஸருடன் ஃபினிஷிங் கொடுத்த தல தோனி

பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ராகுல் சஹர், சிக்கந்தர் ராசா, சாம் கரண், அர்ஷிதீப் சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை எடுத்தனர். இருப்பினும் கூட பகல் நேரத்தில் நடைபெறும் இந்த போட்டியில் பேட்டிங்கு சாதகமான சேப்பாக்கம் மைதானத்தில் 10 – 20 ரன்களை சென்னை குறைவாகவே எடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனாலும் பந்து வீச்சில் சொதப்பாமல் ஓரளவு சிறப்பாக செயல்பட்டாலே வெற்றி பெறும் அளவுக்கு சென்னை போதுமான ரன்களை அடித்துள்ளதால் வெற்றிக்கு போராடி வருகிறது

Advertisement