IPL 2023 : அவர் புதிய கேப்டனா வரணும், டெல்லி தோற்க காரணமான உங்கள கண்ணாடில பாருங்க – வார்னரை விளாசிய ஹர்பஜன்

Harbhajan Singh warner
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் இதுவரை பங்கேற்ற 8 போட்டிகளில் 6 தோல்விகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை வலுவாக பிடித்துள்ளது. அந்த அணிக்கு ரிஷப் பண்ட் ஆரம்பத்திலேயே காயத்தால் விலகிய நிலையில் அதிக ரன்கள் அடித்த வெளிநாட்டு வீரராகவும் 2016இல் கேப்டனாக சாம்பியன் பட்டத்தை வென்ற அனுபவத்தையும் கொண்ட ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் வார்னர் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

Klassen

- Advertisement -

அவரது தலைமையில் பந்து வீச்சு ஓரளவு சிறப்பாக இருந்தும் பேட்டிங்கில் அக்சர் படேல் தவிர்த்து பிரிதிவி ஷா போன்ற அனைத்து முக்கிய பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். அதனால் பெரும்பாலான போட்டிகளில் மெதுவாக விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட அவர் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து முதல் 5 போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்தார். அதன் காரணமாக அதிருப்தியடைந்த சேவாக் 25 பந்தில் 50 ரன்கள் எடுப்பது போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினால் ஐபிஎல் தொடரில் விளையாட வராதீர்கள் என்று வெளிப்படையாக விமர்சித்தார்.

ஹர்பஜன் சாடல்:
இருப்பினும் அதற்கு ஆரம்பத்திலேயே 3 விக்கெட்டுகள் விழுந்த நிலையில் தாமும் நங்கூரமாக விளையாடாமல் அவுட்டாகியிருந்தால் டெல்லி மோசமாக தோற்றிருக்கும் என்று டேவிட் வார்னர் பதிலளித்தார். ஆனால் அடுத்த 2 போட்டிகளில் வெற்றி கண்ட டெல்லி ஹைதராபாத்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் 198 ரன்களை துரத்த முடியாமல் வெறும் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. குறிப்பாக புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே டக் அவுட்டான அவர் கணிசமான ரன்களை எடுத்திருந்தால் கூட பில் சால்ட் 59, மிட்சேல் மார்ஷ் 63, அக்சர் படேல் 29* என இதர பேட்ஸ்மேன்களின் அதிரடியான போராட்டத்துக்கு உதவியாக இருந்து வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கும்.

Warner

அதனால் தோற்ற டெல்லி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது கடினமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டெல்லியின் தோல்விக்கு காரணம் யார் என்பதை டேவிட் வார்னர் உணர்வதற்கு தம்மை தாமே கண்ணாடியில் பார்க்க வேண்டும் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார். அதாவது தோல்விக்கு வார்னர் தான் காரணம் என்று விமர்சிக்கும் அவர் இந்த சீசனில் எடுத்த 300 ரன்கள் டெல்லியின் வெற்றிக்கு எந்த வகையிலும் உதவவில்லை என்று அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

அதனால் அடுத்து வரும் போட்டிகளில் அல்லது அடுத்த சீசனில் ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்படும் அக்சர் படேல் டெல்லியின் கேப்டனாக செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “இந்த நிலையிலிருந்து டெல்லி கம்பேக் கொடுப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அதற்கான அனைத்து காரணமும் அவர்களுடைய கேப்டன் ஆவார். இந்த சீசனில் இதுவரை தனது அணியின் சிறப்பாக வழி நடத்தாத அவருடைய சுமாரான ஃபார்ம் மற்றொரு பிரச்சினையாக இருந்து வருவது ஏமாற்றத்தை கொடுக்கிறது”

Harbhajan

“மேலும் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் வார்னர் ஆரம்பத்திலேயே அவுட்டான காரணத்தால் தான் டெல்லி போராடி வெற்றியின் விளிம்பு வரை வந்தது. ஒருவேளை அவர் 50 பந்துகள் எதிர்கொண்டிருந்தால் அது டெல்லிக்கு 50 பந்துகளை வீணடித்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை கொடுத்திருக்கும். அதை விட போட்டியின் முடிவில் அவர் மற்ற வீரர்கள் செய்த தவறுகளை தான் சுட்டிக்காட்டினார். ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்? இந்த சீசனை இதுவரை நீங்கள் அதிரடி காட்டும் எண்ணத்துடன் விளையாடவில்லை”

இதையும் படிங்க:வீடியோ : யார்க்கர் பந்தால் போட்டியை மாற்றிய நடராஜன் – உள்ளூரில் மட்டுமே அடிப்பார் என டெல்லி இளம் வீரரை கலாய்க்கும் ரசிகர்கள்

“நீங்கள் 300+ ரன்கள் எடுத்துள்ளீர்கள். ஆனால் உங்களுடைய ஸ்ட்ரைக் ரேட்டை பாருங்கள். என்னை பொறுத்த வரை வார்னர் தன்னுடைய தகுதி மற்றும் திறமைக்கேற்றார் போல் விளையாடவில்லை. அவர் அடித்த 300 ரன்கள் டெல்லி அணிக்கு எந்த பயனையும் கொடுக்கவில்லை. எனவே புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பதற்கான காரணத்தை டேவிட் வார்னர் அறிய விரும்பினால் அவர் தன்னை கண்ணாடியில் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement