
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நேற்று இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 8-ஆவது லீக் போட்டியானது நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியார்னது 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அயர்லாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 16 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்களை மட்டுமே குவித்தது.
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஹார்டிக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். பின்னர் 97 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 97 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக ரோஹித் சர்மா 52 ரன்களையும், ரிஷப் பண்ட் 36 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து நாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டெர்லிங் கூறுகையில் : இந்த போட்டியின் போது டாஸ் ஒரு முக்கிய பங்கினை வகித்தது.
இது போன்ற வெளிநாட்டு மைதானங்களில் முதலில் பேட்டிங் செய்யும்போது பந்து பேட்டுக்கு வந்து இடிக்கிறது. எனவே என்னை பொறுத்தவரை முதலில் பந்துவீசி இருந்தால் எங்களுக்கு சாதகமாக இருந்திருக்கும். அதேபோன்று இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். ஒவ்வொரு முறையும் நாங்கள் அவர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த நினைத்தபோது இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டை கைப்பற்றி கொண்டே இருந்தனர்.
இதையும் படிங்க : அமெரிக்காவையே ஏமாத்துறிங்களா? முதல் முறையாக ஒன்று சேர்ந்து ஐசிசி’யை கலாய்த்த மைக்கேல் வாகன் – வாசிம் ஜாபர்
அதோடு அவர்களது பந்துவீச்சு லைன் மற்றும் லெந்த் ஆகியவை ரன் குவிக்க மிகவும் சிரமமாக இருந்தது. இந்த போட்டியின் எந்த ஒரு ஓவரிலுமே எங்களால் இந்திய அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த முடியவில்லை இருந்தாலும் இன்னும் இரண்டு நாட்கள் கழித்து கனடா அணிக்கு எதிரான போட்டியின் போது மிகச் சிறப்பாக திரும்பி வருவோம் என பால் ஸ்டெர்லிங் கூறியது குறிப்பிடத்தக்கது.