அமெரிக்காவையே ஏமாத்துறிங்களா? முதல் முறையாக ஒன்று சேர்ந்து ஐசிசி’யை கலாய்த்த மைக்கேல் வாகன் – வாசிம் ஜாபர்

Micheal Vaughan and Wasim Jaffer
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. அதில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஜூன் ஐந்தாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 97 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக கெராத் டிலானி 26 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 52*, ரிஷப் பண்ட் 36* ரன்கள் அடித்து 12.2 ஓவரிலேயே வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அதனால் குரூப் ஏ பிரிவில் 2 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்த இந்தியா இந்த உலகக் கோப்பையை வெற்றியுடன் துவங்கியது.

- Advertisement -

ரசிகர்கள் ஏமாற்றம்:
முன்னதாக கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் வரலாற்றிலேயே முதல் முறையாக அமெரிக்காவில் இம்முறை உலகக் கோப்பையின் கணிசமான போட்டிகளை ஐசிசி நடத்தி வருகிறது. அதனாலேயே அமெரிக்காவின் புகழ்பெற்ற நியூயார்க் நகரில் இந்தியா 3 போட்டிகளில் விளையாடும் வகையில் ஐசிசி அட்டவணையையும் வடிவமைத்தது.

ஆனால் அங்குள்ள மைதானம் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமமாக அல்லாமல் பந்து வீச்சுக்கு அதிக சாதகமாக இருந்து வருகிறது. ஏனெனில் அந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியிலேயே இலங்கையை 77 ரன்களுக்கு சுருட்டிய தென்னாப்பிரிக்கா அதை துரத்த 16 ஓவர்கள் எடுத்துக் கொண்டது. அதே போல நேற்றைய போட்டியில் அயர்லாந்து அணி இந்தியாவிடம் அதிரடியாக விளையாட முடியாமல் 96 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

அதனால் அந்த மைதானத்தின் மீது பலரும் ஏமாற்றத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் பொதுவாகவே எதிரும் புதிருமாக இருக்கக்கூடிய மைக்கேல் வாகன் மற்றும் வாசிம் ஜாபர் ஆகியோர் இந்த மைதானத்தை ஒரே மாதிரியான கருத்துகளால் விமர்சித்துள்ளனர். அதில் டி20 போட்டிகளில் டெஸ்ட் கிரிக்கெட்டை காண்பித்து அமெரிக்காவையே ஏமாற்றுகிறீர்களா என்ற வகையில் ஐசிசி’யை வாஷிம் ஜாஃபர் ட்விட்டரில் கலாய்த்துள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: இந்தியர்கள் ஆளப்பிறந்தவாங்க.. இப்போவாச்சும் புரிஞ்சிக்கோங்க.. இதான் எனக்கு பெருமை.. ஹர்டிக் பாண்டியா பேட்டி

“நியூயார்க்கின் பிட்ச் அற்புதமாக இருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் மாறுவேடமிட்டு டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடி அமெரிக்க பார்வையாளர்களை ஈர்ப்பதற்கு நல்ல யோசனையாக இருக்கிறது” என்று கூறினார். இது பற்றி மைக்கேல் வாகன் கூறியுள்ளது பின்வருமாறு. “மோசமான பிட்ச். கிரிக்கெட்டை பிரபலப்படுத்த முயற்சிப்பது சிறப்பானது. ஆனால் நியூயார்க் நகரில் சராசரி தரத்திற்கும் குறைவான பிட்ச்சில் வீரர்கள் விளையாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. உலகக் கோப்பைக்கு கடினமாக உழைக்கும் நீங்கள் கடைசியில் இதில் விளையாட வேண்டியுள்ளது” என்று கூறினார்.

Advertisement