பென் ஸ்டோக்ஸ் போட்ட திட்டத்தை பயமில்லாம உடைச்சு அடிச்சுட்டுட்டாரு.. இந்திய வீரரை பாராட்டிய காலிங்வுட்

Paul Collingwood
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து இரண்டாவது போட்டியில் தோல்வியை சந்தித்தது. அந்த நிலையில் இத்தொடரின் முக்கியமான மூன்றாவது போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் நாள் முடிவில் 326/5 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை பெற்றுள்ளது.

இந்திய அணி ஜெய்ஸ்வால் 10, கில் 0, ரஜத் படிடார் 5 ரன்களில் அவுட்டானதால 33/3 என ஆரம்பத்திலேயே தடுமாறியது. இருப்பினும் அப்போது அசத்தலாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா சதமடித்து 131, அறிமுகப் போட்டியில் சர்பராஸ் கான் 62 ரன்களும் எடுத்து இந்தியாவை தூக்கி நிறுத்தினர். அவர்களுடன் விளையாடிய ஜடேஜாவும் சதமடித்து களத்தில் 110* ரன்களுடன் உள்ளார்.

- Advertisement -

திட்டத்தை உடைச்சுட்டாரு:
இப்போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் தங்களுடைய அனுபவம் மற்றும் தரத்துக்கு நிகராக செயல்பட்டு இந்தியாவை காப்பாற்றியது ரசிகர்களால் பாராட்டப்பட்டது. ஆனால் அவர்களை விட நீண்ட போராட்டத்திற்கு பின் இப்போட்டியில் அறிமுகமான சர்பராஸ் கான் கொஞ்சமும் பயமின்றி அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 50 ரன்கள் குவித்து அசத்தினர்.

அதன் வாயிலாக அறிமுக போட்டியிலேயே இரண்டாவது அதிவேகமாக அரை சதமடித்த இந்திய வீரர் என்ற பாண்டியாவின் சாதனையை சமன் செய்த அவர் 62 ரன்களில் துரதிஷ்டவசமாக ரன் அவுட்டானார். இந்நிலையில் சர்பராஸை அவுட்டாக்க பென் ஸ்டோக்ஸ் அட்டாக் செய்யும் ஃபீல்டிங்கை நிறுத்தியதாக இங்கிலாந்து துணை பயிற்சியாளர் பால் காலிங்வுட் கூறியுள்ளார். ஆனால் அதற்கெல்லாம் அஞ்சாமல் சர்பராஸ் கான் தூக்கி அடித்து அசத்தியதாக பாராட்டும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இப்படி விளையாடுவதற்கு நிறைய தைரியம் வேண்டும். களத்திற்கு வந்த அவர் சிறப்பாக பேட்டிங் செய்தார். நாங்கள் அவருக்கு எதிராக அட்டாக் செய்யும் ஃபீல்டிங்கை வைத்தோம். இருப்பினும் அதிரடியாக விளையாடக் கூடிய வீரராக தெரியும் அவர் தன்னுடைய ஷாட்டுகளை அடித்தார். ஆனாலும் தொடர்ந்து அட்டாக் செய்யும் ஃபீல்டிங்கை வைத்தால் தான் அவுட் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று பென் ஸ்டோக்ஸ் நினைத்தார். அது போன்ற சில நேரங்களில் சர்பராஸ் தைரியமாக தூக்கி அடித்தார்”

இதையும் படிங்க: அதுக்காக ஜடேஜாவுக்கு நன்றி தான் சொல்லணும்.. அறிமுக போட்டியில் ரன் அவுட்டானது பற்றி பேசிய சர்பராஸ் பேட்டி

“மேலும் ஸ்வீப் ஷாட்டுகளை நன்றாக விளையாடிய அவர் எங்களுடைய பவுலர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கினார். அறிமுக போட்டியில் இப்படி விளையாடுவதற்கு கொஞ்சம் தைரியம் வேண்டும். அவரைப் பொறுத்த வரை இறுதியில் அப்படி ரன் அவுட்டானது அவமானமாகும். ஆனால் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான சராசரியை கொண்டுள்ள அவர் நல்ல வீரரை போல் தெரிகிறார்” என்று கூறினார்.

Advertisement