- Advertisement -
ஆசிய கோப்பை

ஆசிய கோப்பையில் 3 வீரராகவும், இலங்கை அணி சார்பாக 4 ஆவது வீரராகவும் – பதும் நிசாங்கா நிகழ்த்திய சாதனை

இந்திய அணிக்கு எதிராக நேற்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற சூப்பர் போர் சுற்றின் கடைசி ஆட்டத்தில் பங்கேற்ற இலங்கை அணியானது இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்த்து போட்டியை டிரா செய்து இறுதியில் சூப்பர் ஓவர் வரை சென்று தோல்வியை தழுவியது பலரது மட்டும் பாராட்டுகளை பெற்றுள்ளது. ஏனெனில் இந்த தொடரில் இந்திய அணியை எந்த ஒரு அணியாலும் வீழ்த்த முடியாத வேளையில் இலங்கை அணி கிட்டத்தட்ட இந்திய அணியை வீழ்த்தும் வரை வந்து தோல்வி அடைந்தது பாராட்டினை பெற்று வருகிறது.

பதும் நிசாங்கா நிகழ்த்திய சாதனை :

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 61 ரன்களையும், திலக் வர்மா 49 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது சரியாக 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் அடித்து போட்டியை டிரா செய்தது. பின்னர் சூப்பர் ஓவரில் இலங்கை அணி 2 ரன்கள் மட்டுமே குவிக்க இந்திய அணி 3 ரன்கள் அடித்து அசத்தலான வெற்றியை பெற்றது.

இந்த போட்டியின் போது இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் பதும் நிசாங்கா 58 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் என 107 ரன்கள் குவித்து அசத்தினார். அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் நான்காவது இலங்கை வீரராகவும், ஆசிய கோப்பையில் மூன்றாவது வீரராகவும் ஒரு முக்கிய சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அந்த சாதனை யாதெனில் : இந்த போட்டியில் அவர் டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தினை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் அந்த அணியின் முன்னாள் வீரர்களான ஜெயவர்த்தினே, தில்ஷான் மற்றும் தற்போதைய நட்சத்திர வீரரான குசால் பெரேரா ஆகியோருக்கு அடுத்து நான்காவது இலங்கை வீரராக டி20 போட்டிகளில் சதம் அடித்துள்ளார்.

இதையும் படிங்க : சர்வதேச டி20 போட்டிகளில் 6 ஆவது இந்திய வீரராக அபிஷேக் சர்மா நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ

அதோடு ஆசிய கோப்பை தொடரானது டி20 போட்டிகளாக நடைபெற்ற போது இதற்கு முன்னதாக ஹாங்காங் அணியை சேர்ந்த பாபர் ஹயாத் மற்றும் இந்தியாவை சேர்ந்த விராட் கோலி ஆகியோர் சதம் அடித்திருந்த வேளையில் மூன்றாவது வீரராக பதும் நிசங்கா இந்த பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -