ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சார்பாக இளம் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடி வரும் அவர் போட்டியின் ஆரம்பத்திலேயே அதிரடியான ரன் குவிப்பை வழங்கி வருவதால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பும் அதிகரித்து வருகிறது.
6 ஆவது இந்திய வீரராக அபிஷேக் சர்மா நிகழ்த்திய சாதனை :
இந்த தொடர் முழுவதுமே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அபிஷேக் ஷர்மா நேற்று இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த கடைசி சூப்பர் ஃபோர் சுற்று ஆட்டத்திலும் அற்புதமான இன்னிங்சை விளையாடி இருந்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கும் உதவியிருந்தது.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை குவித்தது. அதில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 61 ரன்களை குவித்தார். குறிப்பாக நேற்றைய போட்டியில் 31 பந்துகளை சந்தித்த அவர் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரது இந்த அற்புதமான இன்னிங்சின் மூலம் ஏகப்பட்ட சாதனைகளை அவர் சர்வதேச டி20 போட்டிகளில் நிகழ்த்தி இருந்தார். அதிலும் குறிப்பாக நேற்று ஆறாவது இந்திய வீரராக அவர் சர்வதே டி20 போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : ஏற்கனவே கடைசியாக நடைபெற்று முடிந்த இரண்டு டி20 போட்டியிலும் அரைசதம் கடந்திருந்த அபிஷேக் ஷர்மா நேற்றைய போட்டியிலும் அரைசதம் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் ஆறாவது இந்திய வீரராக ஹாட்ரிக் அரை சதங்களை பூர்த்தி செய்துள்ளார்.
இதையும் படிங்க : இந்திய அணிக்கு எதிராக நாங்க இவ்ளோ க்ளோஸா வந்து தோக்க அந்த 2 பேர் தான் காரணம் – சரித் அசலங்கா பேட்டி
இதற்கு முன்னதாக இந்திய அணி சார்பில் : விராட் கோலி, கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் டி20 போட்டிகளில் ஹாட்ரிக் அரைசதம் அடித்திருந்த வேளையில் ஆறாவது இந்திய வீரராக நேற்று அபிஷேக் சர்மா இந்த சாதனை பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



