- Advertisement -
ஐ.பி.எல்

லக்னோ அணியை வீழ்த்தி பெற்ற அசத்தலான வெற்றிக்கு காரணமே இவர்தான் – பேட் கம்மின்ஸ் பாராட்டு

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 61-வது லீக் போட்டியானது நேற்று லக்னோ நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

லக்னோ அணியை வீழ்த்தியதில் மிகவும் மகிழ்ச்சி : பேட் கம்மின்ஸ்

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை குவித்தது. லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக மிட்சல் மார்ஷ் 65 ரன்களையும், எய்டன் மார்க்ரம் 61 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது :

- Advertisement -

18.2 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 206 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 59 ரன்களையும், ஹென்றிச் கிளாஸன் 47 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியதாவது :

இந்த 2025 ஐபிஎல் தொடர் நாங்கள் நினைத்த மாதிரி செல்லவில்லை என்பது உண்மைதான். ஆனால் நிச்சயம் இனிவரும் சீசன்களில் எங்களது அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும். இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் 220 ரன்கள் வரை லக்னோ அணி அடிப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால் 205 ரன்களில் சுருட்டியதில் மகிழ்ச்சி குறிப்பாக இசான் மலிங்கா மிகச் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்டை வீழ்த்தியதோடு மட்டுமின்றி அந்த அணியின் ரன் குவிப்பின் வேகத்தையும் கட்டுப்படுத்தினார்.

- Advertisement -

இந்த வெற்றிக்கு அவரது பந்துவீச்சும் மிக முக்கிய காரணம். அதேபோன்று அவர் எங்களது அணியின் பயிற்சியாளர்களுடன் இந்த தொடர் முழுவதுமே ஏகப்பட்ட பயிற்சிகளை எடுத்து தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இனியும் அவர் எங்களது அணிக்காக சிறப்பாக செயல்படுவார் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : இந்த தொடரில் நாங்கள் சந்தித்துள்ள மோசமான நிலைக்கு காரணம் இதுதான் – ராகுல் டிராவிட் அப்செட்

அதேபோன்று எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் தேவையான நேரத்தில் ரிஸ்க் எடுத்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை முன்கூட்டியே முடித்துள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றதை போன்று பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற்று இந்த தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்வோம் என பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -