இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்றான சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 13 போட்டிகளில் விளையாடியுள்ள அவர்கள் 10 போட்டிகளில் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளதோடு பிளே ஆப் வாய்ப்பையும் இழந்து விட்டனர்.
இந்த ஆண்டு ராஜஸ்தான் அணி சரிவை சந்திக்க இதுவே காரணம் : ராகுல் டிராவிட்
கடைசியாக பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய வேளையில் 209 ரன்களை மட்டுமே குவித்ததால் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதிலும் குறிப்பாக ஜெய்ஸ்வால் மற்றும் சூரியவன்ஷி ஆகியோர் அதிரடியான துவக்கம் கொடுத்தும் அந்த அணி சேஸிங்கை கோட்டை விட்டது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்திருந்தது.
இந்நிலையில் இந்த 2025 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சந்தித்த தோல்விகளுக்கு என்ன காரணம்? என்பது குறித்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் வெளிப்படையான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
இந்த தொடரில் எங்களது பேட்ஸ்மேன் மீது குறைகூற எந்த காரணமும் இல்லை. உண்மையிலேயே பந்துவீச்சில் தான் குறை உள்ளதாக நினைக்கிறேன். ஏனெனில் ஒவ்வொரு போட்டியிலுமே 200 முதல் 220 ரன்கள் வரை சேசிங் செய்ய வேண்டிய நிலைமை எங்களுக்கு ஏற்பட்டது. எங்களது மைதானத்தில் 200 முதல் 220 ரன்கள் வரை வரும் என்று நான் நினைக்கவில்லை.
200 ரன்கள் வரை அடிக்கும் மைதானமாகவே அது இருந்தது. ஆனாலும் பந்துவீச்சாளர்கள் கூடுதலாக ஒவ்வொரு போட்டியிலும் ரன்களை வழங்கியதாலே நாங்கள் இந்த நிலையை சந்தித்துள்ளோம். பந்துவீச்சில் போட்டியின் ஆரம்பத்திலேயே சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டை வீழ்த்த வேண்டியது அவசியம். அதேபோன்று இறுதி கட்ட ஓவர்களிலும் ரன்களை கட்டுப்படுத்த வேண்டும்.
இதையும் படிங்க : திக்வேஷிடம் பேசிட்டேன்.. இதை செஞ்சா போதும் 200 ரன்ஸ் சேசிங்கில் ஈஸியா ஜெய்க்கலாம்.. அபிஷேக் பேட்டி
ஆனால் இதை இரண்டையுமே செய்ய தவறியதால் ஒவ்வொரு போட்டியிலுமே நாங்கள் 20 முதல் 30 ரன்கள் வரை கூடுதலாக சேசிங் செய்ய வேண்டியிருந்தது. எனவே இலக்கினை நோக்கி வெற்றிகரமாக சென்றாலும் இறுதியில் அந்த இலக்கினை எட்ட முடியாமல் தோல்வியினை சந்தித்துள்ளோம் என ராகுல் டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.



