திக்வேஷிடம் பேசிட்டேன்.. இதை செஞ்சா போதும் 200 ரன்ஸ் சேசிங்கில் ஈஸியா ஜெய்க்கலாம்.. அபிஷேக் பேட்டி

Abhisek sharma lsg 2
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 18ஆம் தேதி லக்னோவில் 61வது போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் லக்னோவை 10 விக்கெட் வித்தியாசத்தில் அதன் சொந்த மண்ணில் தோற்கடித்தாக ஹைதராபாத் தங்களுடைய 4வது வெற்றியைப் பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ் 65, ஐடன் மார்க்ரம் 61, நிக்கோலஸ் பூரான் 45 ரன்கள் எடுத்த உதவியுடன் 206 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அதைத் துரத்திய ஹைதராபாத் 18.2 ஓவரிலேயே 206-4 ரன்களை எடுத்து எளிதாக வென்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 59, இஷான் கிசான் 35, ஹென்றிச் க்ளாஸென் 47, கமிண்டு மெண்டிஸ் 32 ரன்கள் எடுத்தார்கள். லக்னோவுக்கு அதிகபட்சமாக திக்வேஷ் ரதி 2 விக்கெட்டுகளை எடுத்தும் 7வது தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -

200 ரன்ஸ் சேசிங்:

இந்த தோல்வியால் லக்னோ பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது. முன்னதாக அப்போட்டியில் அபிஷேக் சர்மா விக்கெட்டை எடுத்த திக்வேஷ் ரதி அவரிடம் சில வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டே கோபமாக கையில் எழுதிக் கொண்டாடினார். அதற்கு அபிஷேக் சர்மா பதிலடி கொடுத்ததால் அவர்களுக்குள் ஏற்பட்ட பெரிய சண்டையை நடுவர்கள் தடுத்தது பரபரப்பை உண்டாக்கியது.

இந்நிலையில் போட்டியின் முடிவில் அது பற்றி அவரிடம் பேசி சமாதானம் செய்துக் கொண்டதாக அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார். மேலும் 200 ரன்களை சேசிங் செய்யும் போட்டிகளில் எளிதாக வெல்ல பவர்பிளே ஓவரில் அதிரடியாக விளையாடி வெற்றிகரமான நல்ல துவக்கத்தைப் பெற வேண்டுமென அவர் கூறியுள்ளார். இது பற்றி ஆட்டநாயகன் விருது வென்ற அபிஷேக் பேசியது பின்வருமாறு. “ரதியும் நானும் போட்டியின் முடிவில் பேசிக்கொண்டோம் தற்போது அனைத்தும் நன்றாகி விட்டது”

- Advertisement -

அபிஷேக்கின் திட்டம்

“நாங்கள் முதலில் பேட்டிங் செய்திருந்தால் வேறு திட்டம் வைத்திருந்தேன். 200 ரன்களை சேசிங் செய்யும் போது நான் அதிரடியாக விளையாட செல்ல வேண்டும். முதல் பந்தை பார்த்து அப்போதிலிருந்தே அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்க வேண்டும் என்று நானும் அதர்வாவும் பேசிக்கொண்டோம். சேசிங் செய்யும் போட்டியில் வெற்றி பெற விரும்பினால் அதற்கு பவர் பிளேவை வெல்ல வேண்டும் என்று நீங்கள் எந்த சர்வதேச வீரரிடம் கேட்டாலும் சொல்வார்கள்”

இதையும் படிங்க: ஏலத்தில் வாங்குன அவங்க மிஸ்ஸாகலன்னா.. இந்நேரம் லக்னோ பிளே ஆஃப் போய்ருக்கும்.. ரிஷப் பண்ட் பேட்டி

“நான் என்னுடைய திறமையை வெளிப்படுத்த விரும்பினேன். நான் சிறப்பாக விளையாடினால் என்னுடைய அணியும் சிறப்பாக விளையாடும். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வீரராக நீங்கள் பொறுப்பை எடுத்துக்கொண்டு விளையாட வேண்டும். அதற்கு ஐபிஎல் போட்டியையும் சர்வதேச போட்டியாக நினைத்து திட்டங்களை வகுக்க வேண்டும். அந்தத் திட்டம் முதல் பந்திலேயே இருந்தால் நீங்கள் அங்கிருந்தே அடிக்க செல்ல வேண்டும்” என்று கூறினார்.

Advertisement