பவர்பிளேல ஒன்னும் பண்ண முடியல.. ஆனா அதுக்கு அப்புறம்.. டெல்லி அணியை வீழ்த்தியது குறித்து – கம்மின்ஸ் பேட்டி

Cummins
- Advertisement -

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 35-வது லீக் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சன் ரைசர்ஸ் அணியானது 67 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து அசத்தியது. அதோடு அவர்கள் பெற்ற இந்த வெற்றியின் மூலம் நடப்பு தொடரில் 7 போட்டிகளில் ஐந்தாவது வெற்றியை பதிவு செய்து 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியல் இரண்டாவது இடத்திற்கும் முன்னேறியுள்ளது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது.

- Advertisement -

சன்ரைசர்ஸ் அணி சார்பாக துவக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் 89 ரன்களையும், சபாஷ் அகமது 59 ரன்களையும் குவித்தனர். டெல்லி அணி சார்பாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பின்னர் 267 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்களை மட்டுமே குவித்தது.

சன் ரைசர்ஸ் அணியின் சார்பாக தமிழக வீரர் நடராஜன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் இந்த போட்டியில் தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில் : மீண்டும் ஒரு நல்ல ரெகார்ட் போட்டி இங்கு நடைபெற்றுள்ளது. மற்றொரு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில் மிகவும் மகிழ்ச்சி.

- Advertisement -

முதலில் விளையாடி பெரிய ரன்களை குவித்தோம். அதன் பின்னர் டெல்லி அணி விளையாடும்போது பவர்பிளே ஓவர்களில் எங்களால் பெரிய அளவில் சரியான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியவில்லை. இருப்பினும் பந்து சாஃப்ட் ஆன பின்னர் எங்களது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். முதல் பாதியில் எங்களது பேட்டிங் மிகச்சிறப்பாக இருந்தது.

இதையும் படிங்க : பிட்சை பாத்து தப்பா கணக்கு போட்டுட்டேன்.. நான் பண்ண தப்பு தான் தோல்விக்கு காரணம் – ஒப்புக்கொண்ட ரிஷப் பண்ட்

பின்னர் இரண்டாவது பாதியில் பந்துவீச்சிலும் ஒழுக்கமான முறையில் பந்து வீசியிருந்தோம். எங்களது பந்துவீச்சாளர்கள் அனைவரும் தங்களது திட்டத்தை சரியாக வகுத்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றியைத் தேடித் தந்தனர் என பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஐபிஎல் தொடரில் கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய சன் ரைசர்ஸ் அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement