IND vs AUS : உண்மையிலே இதை நெனச்சா கஷ்டமா இருக்கு. தோல்விக்கு பிறகு – பேட் கம்மின்ஸ் பேசியது என்ன?

Pat-Cummins
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்ற வேளையில் அந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

Nathan Lyon Pujara IND vs AUS

- Advertisement -

அதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் துவங்கிய இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது நேற்று நடைபெற்ற மூன்றாவது நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியிலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய அணியானது இந்த தொடரில் தற்போது இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இப்படி இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலுமே ஆஸ்திரேலியா அணி தோல்வியை சந்தித்துள்ளதால் இந்த தொடரில் அவர்கள் இனியும் இந்திய அணியை வீழ்த்துவது என்பது முடியாத காரியமாக மாறியுள்ளது.

KL Rahul 1

இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி பெற்ற தோல்விக்கு பின்னர் அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசுகையில் கூறியதாவது : இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் நாங்கள் 260 ரன்கள் குவித்ததை நல்ல இன்னிங்ஸ்சாகவே நினைத்தோம். அதேபோன்று இந்திய அணியும் எங்களை விட ஒரு ரன்னை குறைவாக எடுக்க வைத்தது சிறப்பாக அமைந்தது.

- Advertisement -

ஆனாலும் இரண்டாவது இன்னிங்ஸின் போது எதுவுமே நாங்கள் நினைத்தது போன்று நடக்கவில்லை. அது எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. முதல் இன்னிங்சில் ஒரு ரன் முன்னிலையில் இருந்தும் நாங்கள் இந்த போட்டியை தவறவிட்டது வருத்தம் தான். எங்களது பேட்ஸ்மேன்கள் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது எங்களது சரிவிற்கு காரணமாக அமைந்தது.

இதையும் படிங்க : IND vs AUS : 2 ஆவது போட்டியில் நாங்க பெற்ற வெற்றிக்கு காரணம் இதுதான் – வெற்றிக்கு பிறகு ரோஹித் பேசியது என்ன

அதேவேளையில் இந்திய பந்துவீச்சாளர்கள் இந்த சூழலுக்கு ஏற்ப மிகச்சிறப்பாக பந்துவீசி எங்களைவீழ் வீழ்த்தி விட்டனர். ஒரு கட்டத்தில் நாங்கள் இந்திய அணியை விட ஒரு ரன் முன்னிலையில் இருந்தும் இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்தது மிகவும் வருத்தம் என பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement