IND vs AUS : 2 ஆவது போட்டியில் நாங்க பெற்ற வெற்றிக்கு காரணம் இதுதான் – வெற்றிக்கு பிறகு ரோஹித் பேசியது என்ன?

Rohit-Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது நேற்று நடைபெற்ற மூன்றாவது நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய அணியானது இந்த நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில் கூறியதாவது : இந்த வெற்றி எங்களுக்கு மிகப் பிரமாதமான ஒரு வெற்றியாக அமைந்துள்ளது. ஏனெனில் இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் நாங்கள் நினைத்தது மூன்றாம் நாள் ஆட்ட நேரத்தில் சரியாக நடந்ததாக உணர்கிறேன்.

இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸ்சில் நமது அணியின் வீரர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினர். குறிப்பாக மூன்றாம் நாள் காலையில் 9 விக்கெட்டுகளையும் விரைவாக வீழ்த்தியதில் மிகவும் மகிழ்ச்சி. அதனை தொடர்ந்து நாங்கள் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றுள்ளோம்.

Nathan Lyon Pujara IND vs AUS

இலக்கு சிறியதாக இருந்தாலும் சரியான இடத்தில் ரன்களை குவிக்க வேண்டும் என்று நினைத்தோம். அந்த வகையில் எந்த ஒரு தவறையும் செய்யாமல் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டதாக உணர்கிறேன். இதுபோன்ற மைதானங்களில் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் பந்து வீசுவதில் வல்லவர்கள்.

- Advertisement -

இந்த இரண்டாவது இன்னிங்சில் அவர்கள் பந்து வீசியதை பார்த்திருந்தாலே உங்களுக்கு அவர்களது திறன் என்ன என்று தெரிந்திருக்கும். அதே வேளையில் இந்த போட்டியில் நாங்கள் பெற்ற வெற்றிக்கு முதலில் ஜடேஜா மற்றும் விராத் கோலி ஆகியோர் அமைத்த பார்ட்னர்ஷிப்பும், அக்சர் பட்டேல் மற்றும் அஸ்வின் அமைத்த பாட்னர்ஷிப்பும் மிகவும் முக்கியமானது.

இதையும் படிங்க : IND vs AUS : என்னாங்க பெரிய நம்பர் 2 பேட்ஸ்மேன், தரமான ஸ்டீவ் ஸ்மித்துக்கு எதிராக 2 அசால்ட்டான சாதனை படைத்த அஷ்வின்

அதன் காரணமாகவே முதல் இன்னிங்சில் எங்களுக்கு நல்ல சமநிலை ஏற்பட்டது. பிறகு அதனை நாங்கள் இரண்டாவது இன்னிங்ஸ்சிலும் செயல்படுத்தி வெற்றியை பெற்றோம் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement