IND vs AUS : இவ்வளவு சீக்கிரம் இப்படி நடக்கும்னு நான் நினைக்கல – தோல்விக்கு பிறகு பேட் கம்மின்ஸ் பேசியது என்ன?

Pat-Cummins
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்க்கனவே கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியாமல் திணறி வரும் ஆஸ்திரேலியா அணியானது இம்முறையாவது டெஸ்ட் தொடரை இந்தியாவில் கைப்பற்ற வேண்டும் என்று முனைப்புடன் முழுபலம் வாய்ந்த அணியாக இங்கு வந்தது.

IND vs AUS

- Advertisement -

ஆனால் இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி துவங்கிய முதலாவது டெஸ்ட் போட்டி நேற்றைய மூன்றாவது நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்த வேளையில் இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியானது இந்திய அணியிடம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து.

அதன் காரணமாக இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. அதன்படி இந்த முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 177 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணி 400 ரன்களை குவித்தது.

IND vs AUS Siraj SMith

பின்னர் 223 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 91 ரன்களை மட்டுமே குவித்ததால் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில் : இந்த போட்டி இவ்வளவு சீக்கிரமாக முடியும் என்று நான் நினைக்கவில்லை.

- Advertisement -

இந்தியாவில் நடக்கும் போட்டிகள் வெகு விரைவாக முடிவடைகின்றன. இந்திய அணியின் வீரர்கள் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடினர். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அருமையாக பந்துவீசினர். பேட்டிங்கில் ரோஹித் சர்மா அற்புதமாக விளையாடினார். இந்த போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் பந்து நன்றாக ஸ்பின் ஆனது. ஆனாலும் விளையாட முடியாத அளவிற்கு எல்லாம் இந்த மைதானம் கடினமானதாக இல்லை.

இதையும் படிங்க : IND vs AUS : ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு பின்னர் – ரோஹித் பேசியது என்ன?

நாங்கள் முதல் இன்னிங்சில் இன்னும் 100 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும் ஆனால் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததால் எங்களால் பெரிய ரன்னுக்கு செல்ல முடியவில்லை. எப்பொழுதுமே முதல் இன்னிங்சில் பெரிய ஸ்கோருக்கு செல்ல வேண்டியது அவசியம். ஆனால் அதனை நாங்கள் இங்கே செய்ய தவறிவிட்டோம். இந்த போட்டியில் அறிமுகமான டாட் முர்பி மிகச் சிறப்பாக விளையாடினார் என பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement