IND vs AUS : ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு பின்னர் – ரோஹித் பேசியது என்ன?

Rohit Press
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி துவங்கிய முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்ற மூன்றாவது நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

IND vs AUS

- Advertisement -

பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது 400 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக 223 ரன்கள் பின்தங்கி நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 91 ரன்களை மட்டுமே குவித்ததன் காரணமாக ஒரு இன்னிங்ஸ் மட்டும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியிடம் படுதோல்வியை சந்தித்தது.

இதன் காரணமாக இந்திய அணி தற்போது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியின் வெற்றிக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா என்ன பேசினார் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். அதன்படி வெற்றிக்கு பிறகு பேசிய ரோகித் சர்மா கூறுகையில் : இந்த தொடரை வெற்றியுடன் ஆரம்பிப்பது மிகவும் முக்கியம்.

IND

அந்த வகையில் ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளோம். நான் கடைசியாக நடைபெற்ற சில டெஸ்ட் போட்டிகளை காயம் காரணமாக தவறவிட்டேன். தற்போது மீண்டும் கேப்டனாக அணிக்கு திரும்பியிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் இதுவரை இரண்டு போட்டிகள் மட்டுமே கேப்டனாக விளையாடி உள்ளேன். ஏனெனில் இங்கிலாந்து தொடரின் போது கோவிட் பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு தென்னாப்பிரிக்க தொடரை தவறவிட்டேன்.

- Advertisement -

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரிலும் காயம் காரணமாக விளையாடவில்லை. இப்படி அடுத்தடுத்த தொடர்களை தவறவிட்ட நான் தற்போது இந்த ஆஸ்திரேலிய தொடரில் முழுவதுமாக பங்கேற்க உள்ளேன். இந்த போட்டியில் நான் விளையாடும் போது ரன்களை குவிக்க வேண்டும் என்று நினைத்தே விளையாடினேன். நான் வளர்ந்தது மும்பை மைதானத்தில் என்பதனால் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக விளையாடுவது எனக்கு சற்று சவுகரியமாக இருந்தது.

இதையும் படிங்க : IND vs AUS : இந்திய ஸ்பின்னர்கள் அதை சரியா செஞ்சாங்க, எங்களால முடியல – சரிவின் காரணத்தை ஓப்பனாக பேசிய டோட் முர்ஃபி

டெஸ்ட் கிரிக்கெட்டில் அடிப்படை பேட்டிங் யுக்தி சரியாக இருந்தால் ரன்கள் நமக்கு கிடைக்கும். அதே போன்று நமது அணியில் உள்ள சுழற்பந்து வீச்சாளர்கள் எவ்வளவு தரம் வாய்ந்தவர்கள் என்பது நமக்குத் தெரியும். அவர்களே ஆஸ்திரேலிய அணிக்கு தொந்தரவுகளை அளித்தனர். அதேபோன்று சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இணையாக வேகப்பந்து வீச்சாளர்களும் மிகச் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர் என ரோஹித் சர்மா பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement