IND vs AUS : இந்திய ஸ்பின்னர்கள் அதை சரியா செஞ்சாங்க, எங்களால முடியல – சரிவின் காரணத்தை ஓப்பனாக பேசிய டோட் முர்ஃபி

- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா முதலில் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ளது. வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்து விட்ட அந்த அணி 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களை சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடிக்கும் முனைப்புடன் களமிறங்கியது. அதற்காக ஆரம்பத்திலேயே சுழலுக்கு சாதகமாக நாக்பூர் பிட்ச் உருவாக்கப்பட்டுள்ளதாக விமர்சித்த ஆஸ்திரேலியா பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தாலும் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் வெறும் 177 ரன்களுக்கு சுருண்டது.

IND vs AUS Siraj SMith

- Advertisement -

அதிகபட்சமாக மார்னஸ் லபுஸ்ஷேன் 49 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்களை விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா அதே மைதானத்தில் ரோஹித் சர்மா 120, அக்சர் படேல் 84, ரவீந்திர ஜடேஜா 70 என முக்கிய வீரர்களின் பொறுப்பான ஆட்டத்தால் மிகச் சிறப்பாக செயல்பட்டு 400 ரன்கள் குவித்து அசத்தியது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக அறிமுகப் போட்டியில் அசத்திய டோட் முர்பி 7 விக்கெட்டுகளை சாய்த்தார்.

சரியா செயல்படல:
அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முன்பை விட மோசமாக பேட்டிங் செய்து வெறும் 91 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 25* ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாகப் இப்போட்டியில் இந்திய ஸ்பின்னர்களுக்கு 2.9 டிகிரி மட்டுமே சுழன்ற நாக்பூர் பிட்ச் ஆஸ்திரேலிய ஸ்பின்னர்களுக்கு 3.4 டிகிரி அதிகமாகவே சுழன்றது.

IND vs AUS Rohit

ஆனால் அதில் நல்ல வேரியேஷன்களை பயன்படுத்த தவறிய காரணத்தால் ஆஸ்திரேலியா ஸ்பின்னர்கள் எப்போதுமே தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இருப்பினும் டோட் முர்பி மட்டும் அறிமுக போட்டியில் நேதன் லயன் போன்ற சீனியரை மிஞ்சி 7 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இந்நிலையில் இந்திய ஸ்பின்னர்களை விட ஆஸ்திரேலிய ஸ்பின்னர்கள் பந்தை பிடித்து வீசியதில் சுமாராக செயல்பட்டதே இந்த சரிவுக்கு முக்கிய காரணம் என்று டோட் முர்பி வெளிப்படையாக கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கடந்த சில நாட்கள் எனக்கு மிகவும் ஸ்பெஷலானதாக அமைந்தது. அறிமுக போட்டியிலே 5 விக்கெட் எடுப்பேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இது எனது வாழ்நாள் முழுவதும் நினைத்து பெருமைப்படும் தருணமாக அமைந்தது. இந்த உலகில் இருக்கும் பெரும்பாலான பேட்ஸ்மன்களுக்கு எதிராக நான் பந்து வீதியதில்லை. ஆனால் இந்திய வீரர்கள் அவர்களுடைய கைகளை சிறப்பாக பயன்படுத்தினார்கள் என்று நினைக்கிறேன். குறிப்பாக அவர்கள் எங்களது பேட்ஸ்மேன்களின் கால்களுக்கு முன்பாக பந்து வரும் அளவுக்கு கைகளை மிகச் சிறப்பாக பயன்படுத்தினர்”

Todd Murphy 1

“அதே சமயம் அந்த பந்துகளில் அதிக ரன்கள் அடிப்பது போன்ற சூழலும் ஏற்படுகிறது. அதனால் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் அதை எதிர்கொள்ள மிகவும் சிரமத்தை சந்தித்தனர். உண்மையை சொல்ல வேண்டுமெனில் இந்த போட்டியில் என்னுடைய மிதவேகம் எந்த இடத்திலும் சரியாக அமையவில்லை. மேலும் இப்போட்டிக்கு முன்பாக நிகழ்ந்த வலை பயிற்சியில் மட்டுமே நான் சற்று மாற்றங்களை செய்தேன். அதில் நல்ல முடிவு வருவதாக இதர வீரர்கள் சொன்னார்கள். அதனால் அதே இடத்தில் பந்து வீசிய என்னால் மிகச் சிறந்தவற்றை செய்ய முடிந்தது” என்று கூறினார்.

இதையும் படிங்க: IND vs AUS : ஆஸ்திரேலியாவை முடிக்க என்கிட்ட பந்தை கொடுங்கன்னு அந்த 2 பேரும் அடம் பிடிச்சாங்க – ரோஹித் கலகலப்பான கருத்து

முன்னதாக செயலில் பேசாமல் வாயில் பேசும் நிறைய ஆஸ்திரேலியர்களுக்கு மத்தியில் செய்த சாதனையை மிகைப்படுத்தாமல் இப்படி அடக்கமாக பேசும் இவரை பார்க்கும் இந்திய ரசிகர்கள் நிச்சயமாக நீங்கள் பெரிய அளவில் வருவீர்கள் என்று பாராட்டுகின்றனர். அதற்கேற்றார் போல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே மிகவும் இளம் வயதில் 5 விக்கெட்டுகள் எடுத்த ஆஸ்திரேலிய ஸ்பின்னர் என்ற வரலாற்றையும் அவர் படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement