IND vs AUS : யாரா இருந்திருந்தாலும் இது கஷ்டமா தான் இருந்திருக்கும். தோல்விக்கு பின் – பேட் கம்மின்ஸ் பேட்டி

Cummins
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 2023-ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மிக முக்கியமான போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது நான்கு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்களை மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் கே.எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோரது மிகச் சிறப்பான ஆட்டத்தின் காரணமாக 41.2 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 201 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியில் குறைந்தது 50 ரன்களாவது அதிகமாக அடித்திருக்க வேண்டும். இந்த போட்டியில் 200 ரன்களுக்கு கீழ் எதிரணியை சுருட்டுவது என்பது மிகவும் கடினமான காரியம்.

- Advertisement -

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி எங்களை சுருட்டினர். எங்களது அணியிலும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இருந்ததை நினைத்து நான் வருத்தம் அடையவில்லை. ஆனாலும் ரன்கள் குறைவாக இருந்ததே இந்த போட்டியில் எங்களது தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஆரம்பத்தில் மிட்சல் மார்ஷ் கேட்சை விட்டது பற்றி நான் யோசிக்கவில்லை.

இதையும் படிங்க : CWC 2023 : சச்சினின் வாழ்நாள் சாதனையை உடைத்த கிங் கோலி.. ஐசிசி தொடர்களின் கில்லியாக புதிய சரித்திர சாதனை

ஒருவேளை 10 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் விழுந்து இருந்தால் போட்டியே கனவு துவக்கமாக அமைந்திருக்கும். ஹேசல்வுட் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார். அவரது பவுலிங் என்று மிகச் சிறப்பாக இருந்தது. இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்து இருந்தாலும் இது 9 போட்டியில் ஒரு தோல்வி மட்டும்தான். எனவே இதிலிருந்து நாங்கள் சில பாடங்களை கற்றுக்கொண்டு அடுத்த போட்டியில் பலமாக திரும்புவோம் என பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement