CWC 2023 : சச்சினின் வாழ்நாள் சாதனையை உடைத்த கிங் கோலி.. ஐசிசி தொடர்களின் கில்லியாக புதிய சரித்திர சாதனை

Sachin tendulkar virat khohli
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 8ஆம் தேதி நடைபெற்ற 5வது லீக் சுற்று போட்டியில் பரபரப்பான தருணங்களுக்கு பின் வலுவான ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தங்களுடைய பயணத்தை வெற்றியுடன் துவங்கியது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49.3 ஓவரில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக டேவிட் வார்னர் 41, ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து 200 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா, இசான் கிசான், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய 3 பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் வேகத்தில் டக் அவுட்டாகி பெரிய அழுத்தத்தை கொடுத்தனர்.

- Advertisement -

ஐசிசி தொடரில் கிங் கோலி:
அதனால் 2/3 என்ற துவக்கத்தை பற்றி ஆரம்பத்திலேயே திண்டாடிய இந்தியா தோல்வியை சந்திக்கும் என்று ரசிகர்கள் கவலையடைந்த போது மிடில் ஆர்டரில் ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக விளையாடி 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து செங்குத்தாக தூக்கி நிறுத்திய விராட் கோலி 85 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் அவருடன் அசத்தியர் ராகுல் 97* (115) ரன்கள் எடுத்ததால் 41.2 ஓவரிலேயே இந்தியா போராடி அபாரமான வெற்றி பெற்றது.

அந்த வகையில் இப்போட்டியில் மீண்டும் அழுத்தமான சூழ்நிலையில் இந்தியாவை அபாரமாக விளையாடி காப்பாற்றிய விராட் கோலி தன்னை கிங் என்பதை மீண்டும் நிரூபித்தார். அதிலும் ஏற்கனவே சேஸ் மாஸ்டர் என்று வல்லுனர்கள் மற்றும் ரசிகர்களால் போற்றப்படும் அவர் உண்மையாகவே தற்போது அதை நிஜமாக்கியுள்ளார். அதாவது ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டிகளில் விராட் கோலி 5517 ரன்களை அடித்துள்ளார்.

- Advertisement -

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்த அவர் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 5517*
2. சச்சின் டெண்டுல்கர் : 5490
3. ரிக்கி பாண்டிங் : 4186
4. ரோஹித் சர்மா : 3983*
5. ஜாக் கேலிஸ் : 3950

இதையும் படிங்க: CWC 2023 : அதிவேக 11,000 ரன்கள்.. பாண்டிங், சங்ககாரா சாதனையை தகர்த்த கிங் கோலி – 2 உலக சாதனை

அதை விட 50 ஓவர் உலகக்கோப்பை, 20 ஓவர் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 விதமான வெள்ளைப்பந்து ஐசிசி தொடர்களில் இதுவரை விராட் கோலி 2720* ரன்களை அடித்துள்ளார். இதன் வாயிலாக ஐசிசி வெள்ளைப்பந்து தொடர்களில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சச்சினின் வாழ்நாள் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சரித்திர சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 2720*
2. சச்சின் டெண்டுல்கர் : 2719
3. ரோஹித் சர்மா : 2422*
4. யுவராஜ் சிங் : 1707
5. சௌரவ் கங்குலி : 1671

Advertisement