CWC 2023 : அதிவேக 11,000 ரன்கள்.. பாண்டிங், சங்ககாரா சாதனையை தகர்த்த கிங் கோலி – 2 உலக சாதனை

Virat Kohli record
- Advertisement -

பரபரப்பான துவக்கத்தை பெற்றுள்ள ஐசிசி 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 8ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற 5வது லீக் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதை தொடர்ந்து 200 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா, இசான் கிசான், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய 3 பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் வேகத்தில் டக் அவுட்டாகி மெகா பின்னடைவை ஏற்படுத்தினார்கள்.

- Advertisement -

கிங் கோலியின் சாதனைகள்:
அதனால் 2/3 படுமோசமான துவக்கத்தை பெற்று திண்டாடிய இந்தியாவை மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடி காப்பாற்றிய விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் 165 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து ஆஸ்திரேலியாவிடம் சென்ற வெற்றியை பறித்தனர். அதில் விராட் கோலி 85 ரன்களில் அவுட்டானாலும் கேஎல் ராகுல் 97* ரன்கள் எடுத்து 41.2 ஓவரிலேயே இந்தியா வெற்றி பெறும் அளவுக்கு சிக்சருடன் சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.

அந்த வகையில் இப்போட்டியில் அழுத்தமான சூழ்நிலையில் சவாலான ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறி விளையாடிய விராட் கோலி வெற்றியில் முக்கிய பங்காற்றி மீண்டும் தன்னைச் சாம்பியன் வீரர் என்பதை நிரூபித்தார். அதை விட இந்த 85 ரன்களையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 270 இன்னிங்ஸில் 13,168 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 3வது இடத்தில் பேட்டிங் செய்து மட்டும் அவர் 215 இன்னிங்ஸில் 11000 ரன்களை குவித்துள்ளார்.

- Advertisement -

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் 3வது இடத்தில் களமிறங்கி அதிவேகமாக 11000 ரன்கள் அடித்த வீரர் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் வரலாற்றில் ரிக்கி பாண்டிங் மட்டுமே 3வது இடத்தில் 11000க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து மொத்தம் 330 இன்னிங்ஸில் 12,662 ரன்கள் எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: 

தற்போது அவரை விட குறைந்த இன்னிங்ஸில் விராட் கோலி 11,000 ரன்கள் எடுத்து இந்த சாதனை படைத்துள்ளார். இது போக ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 3, 4, 5 போன்ற இடங்களில் களமிறங்கி விராட் கோலி 113 முறை 50க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ளார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை 50க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் அல்லாத பேட்ஸ்மேன் என்ற குமார் சங்ககாராவின் சாதனையையும் தகர்த்துள்ள அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 113*
2. குமார் சங்ககாரா : 112
3. ரிக்கி பாண்டிங் : 109
4. ஜாக் காலிஸ் : 102

Advertisement