ஈஸியான டார்கெட் தான் ஆனா.. எல்லாரும் வலியால் உடைஞ்சுருக்கோம்.. தோல்விக்கு பின் கமின்ஸ் சோகமான பேட்டி

Pat Cummins
- Advertisement -

இந்தியாவில் விறுவிறுப்பான திருப்பங்களுடன் நடைபெற்று வரும் ஐசிசி 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 12ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற 10வது லீக் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை 134 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த தென்னாபிரிக்கா 2வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. மதியம் 2:00 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 50 ஓவரில் 311/7 ரன்கள் குவித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக குவிண்டன் டீ காக் சதமடித்து 109 (106), ஐடன் மார்க்ரம் 56 (44) ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் மற்றும் கிளன் மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 312 ரன்களை துரத்தி ஆஸ்திரேலியாவுக்கு மிட்சேல் மார்ஷ் 7, டேவிட் வார்னர் 13 ரன்களில் அவுட்டாக ஸ்டீவ் ஸ்மித் 19 ரன்களில் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்து சென்றார்.

- Advertisement -

உடைந்த ஆஸ்திரேலியா:
அத்துடம் ஜோஸ் இங்லீஷ் 4, மார்கஸ் ஸ்டோனிஸ் 5, கிளன் மேக்ஸ்வெல் 3 என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 70/6 என சரிந்த ஆஸ்திரேலியாவை லபுஸ்ஷேன் 46, மிட்சேல் ஸ்டார்க் 27, கேப்டன் கமின்ஸ் 22 ரன்கள் எடுத்த போதிலும் 40.5 ஓவரிலேயே சுருட்டி அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ரபாடா 3 விக்கெட்டுகளையும் சம்சி, மார்கோ யான்சென், கேசவ் மகாராஜ் தலா 2 விக்கெட்களையும் எடுத்தனர்.

அதனால் 2 போட்டிகளில் 2வது தோல்வியை பதிவு செய்த ஆஸ்திரேலியா புள்ளி பட்டியலில் 9வது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்நிலையில் 312 என்பது எட்டக்கூடிய இலக்காக இருந்த போதிலும் அதை தொட முடியாத அளவுக்கு தென்னாப்பிரிக்கா பவுலர்கள் தங்களை கட்டுப்படுத்தி விட்டதாக கேப்டன் பட் கம்மின்ஸ் கூறியுள்ளார். இந்த தோல்வியால் தங்களுடைய வீரர்கள் மனமடைந்துள்ளதாக தெரிவிக்கும் அவர் தவறுகளை திருத்திக் கொண்டு மீண்டும் கம்பேக் கொடுப்போம் என்று நம்பிக்கை தெரிவித்து பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“டீ காக் சிறப்பாக விளையாடினார். ஆனால் எங்களால் முன்கூட்டியே விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. மேலும் நல்ல துவக்கத்தை பெற்ற அவர்களை 312 ரன்களுக்கு கட்டுப்படுத்தியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அது எட்டக்கூடிய இலக்காகும். இருப்பினும் இன்றைய இரவில் அதை எட்டுவது கடினமாக இருந்தது. அவர்களுடைய பவுலர்களும் சிறப்பாக செயல்பட்டனர்”

இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவின் வெற்றியை சிதைத்த 2 சர்ச்சை அவுட்.. டெக்னாலஜி செய்த சதி.. ரூல்ஸ் சொல்வது என்ன

“மேலும் முதலில் பேட்டிங் செய்யாததற்காக வருத்தப்படவில்லை. ஏனெனில் இந்த தொடரில் நீங்கள் சவாலை கொடுக்க பேட்டிங் அல்லது சேசிங் ஆகிய எதுவாக இருந்தாலும் சிறப்பாக விளையாட வேண்டும். தற்போதைக்கு கொண்டு எதுவும் சொல்வதற்கில்லை. நாங்கள் அனைவரும் மனமடைந்துள்ளோம். சில நாட்கள் ஓய்வெடுத்து சிலவற்றை சரி செய்து கொண்டு மீண்டும் அடுத்த போட்டியில் கம்பேக் கொடுப்போம்” என்று கூறினார்.

Advertisement