ஆஸ்திரேலியாவின் வெற்றியை சிதைத்த 2 சர்ச்சை அவுட்.. டெக்னாலஜி செய்த சதி.. ரூல்ஸ் சொல்வது என்ன

DRS Review.jpeg
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பரபரப்பான திருப்பங்களுடன் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 12ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற 10வது லீக் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை 134 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ஓவர்களில் 311/7 ரன்கள் எடுத்து அசத்தியது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக துவக்க வீரர் குயிண்டன் டீ காக் அதிரடியான சதமடித்து 109 ரன்களும் ஐடன் மார்க்கம் 56 ரன்களும் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க், கிளன் மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 312 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு மிட்சேல் மார்ஷ் 7, டேவிட் வார்னே 13, ஸ்டீவ் ஸ்மித் 19, ஜோஸ் இங்லிஷ் 5, கிளன் மேக்ஸ்வெல் 3, மார்கஸ் ஸ்டோனிஸ் 5 என முக்கிய வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.

- Advertisement -

டெக்னாலஜியின் சதி:
அதனால் 70/6 என ஆரம்பத்திலேயே சரிந்த ஆஸ்திரேலியாவுக்கு லபுஸ்ஷேன் 46, மிட்சேல் ஸ்டார்க் 27, கேப்டன் கமின்ஸ் 22 ரன்கள் எடுத்தும் 40.5 ஓவரில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை சந்தித்தது. அந்த அளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ரபாடா 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

முன்னதாக இந்த போட்டியில் 6 கேட்ச்களை தவற விட்டு வெற்றியை கோட்டை விட்ட ஆஸ்த்ரேலியாவுக்கு அதிர்ஷ்டமும் கை கொடுக்கவில்லை என்றே சொல்லலாம். அதாவது வார்னர், மார்ஷ் ஆகியோர் அவுட்டானதால் சரிவை சந்தித்த ஆஸ்திரேலியாவை போராட முயற்சித்த ஸ்டீவ் ஸ்மித் 10வது ஓவரில் ரபாடா வீசிய 5வது பந்தை எதிர்கொண்டார். இருப்பினும் லெக் சைட் வந்த பந்தை அவர் சரியாக கணிக்க தவறினார். அதனால் அவரது காலில் பந்து பட்டதை தொடர்ந்து தென்னாபிரிக்க அணியினர் எல்பிடபிள்யூ முறையில் அவுட் கேட்டனர்.

- Advertisement -

ஆனால் பார்ப்பதற்கு நன்றாக லெக் ஸ்டம்ப்க்கு வெளியே சென்றது தெளிவாகத் தெரிந்ததால் களத்தில் இருந்த நடுவர் ஜோயல் வில்சன் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். அதைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணியினர் டிஆர்எஸ் எடுத்தபோது பந்து லெக் ஸ்டம்ப்பில் பட்ட காரணத்தால் 3வது நடுவர் தீர்ப்பை மாற்றி கொடுத்தது ஸ்மித்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சொல்லப்போனால் இது எப்படி அவுட்டாகும் என்று ஜோயல் வில்சனும் ஆச்சரியத்தை வெளிப்படுத்திய நிலையில் ஸ்மித் தலையை அசைத்துக் கொண்டே மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பினார்.

அதே போல ரபாடா வீசிய 18வது ஓவரின் 2வது பந்தை எதிர்கொண்ட ஸ்டோனிஸ் எட்ஜ் கொடுத்தது போல் தெரிந்தால் தென்னாப்பிரிக்கா அணியினர் அவுட் கேட்டனர். ஆனால் களத்தில் இருந்த நடுவர் அவுட் கொடுக்க மறுத்ததை தொடர்ந்து தென்னாபிரிக்கா மீண்டும் டிஆர்ஸ் எடுத்தது. அப்போது ஸ்டோனிஸ் இடது கையில் படாதவாறு பந்து சென்ற போதும் ஸ்னிக்கோ மீட்டரில் ஸ்பைக் தெரிந்ததால் அவுட் கொடுக்கப்பட்டது மற்றுமொரு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: நல்லவேளை சச்சின் அதை செய்யல.. இல்லைனா 2011 உ.கோ’யில் பாகிஸ்தானிடம் தோத்துருப்போம்.. சேவாக் வெளிப்படை

மறுபுறம் பந்து தனது கையில் படாதது போல் உணர்ந்த ஸ்டோனிஸ் ஏமாற்றத்துடன் சென்றார். அப்படி அந்த 2 தருணங்களிலும் களத்தில் இருந்த நடுவர் அவுட் கொடுக்காத அளவுக்கு ஆஸ்திரேலியா பக்கம் சாதகமான அம்சங்கள் இருந்தன. ஆனாலும் நடுவர்கள் போலவே டிஆர்எஸ் தொழில்நுட்பம் கொடுக்கும் தீர்ப்பும் இறுதி என்ற விதிமுறை இருப்பதால் ஆஸ்திரேலியா பின்னடைவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement