WTC Final : ஃபார்மட் சரில்ல மாத்துங்க என பழி போட்ட ரோஹித் சர்மா – ஒலிம்பிக் பற்றி தெரியுமா? என கமின்ஸ் மாஸ் பதிலடி

IND-vs-AUS
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. மறுபுறம் பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்து துறைகளிலும் சுமாராக செயல்பட்ட இந்தியா ஏற்கனவே நியூசிலாந்துக்கு எதிராக கடந்த ஃபைனலில் தோல்வியை சந்தித்த நிலையில் இம்முறையும் தோற்றுள்ளது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. அதனால் 2013க்குப்பின் ஐசிசி உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற இந்தியாவின் கனவு மீண்டும் உடைந்துள்ளது.

இப்போட்டியில் ஆரம்பத்திலேயே டாஸ் அதிர்ஷ்டம் கிடைக்கும் வானிலையை கருத்தில் கொண்டு முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோர் குவித்து அழுத்தத்தை எதிரணியின் பக்கம் திருப்பும் முடிவை எடுக்காத கேப்டன் ரோகித் சர்மா சுழலுக்கு சாதகமான ஓவல் மைதானத்தில் 4வது பவுலராக அஸ்வினை தேர்வு செய்யாதது எந்த பலனையும் கொடுக்கவில்லை. குறிப்பாக ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் 5 பேர் இடது கை பேட்ஸ்மேன்களாக இருந்தும் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக இடது கை பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கிய பவுலராக தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் அஷ்வினை காரணமின்றி கழற்றி விட்டது தோல்விக்கு நேரடி காரணமாக அமைந்தது.

- Advertisement -

ஒலிம்பிக் தெரியுமா:
அது போக ஐபிஎல் தொடரில் ஒரு நாளில் வெறும் 4 ஓவர்கள் மட்டும் வீசிய இந்திய பவுலர்கள் முழுமையாக தயாராமல் ஃபைனலில் ஒரே நாளில் 17 ஓவர்களை சோர்வுடன் வீசி ரன்களை வாரி வழங்கியது தோல்வியை கொடுத்தது. அது மட்டுமின்றி ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா போன்ற நட்சத்திரங்கள் மீண்டும் ஃபைனலில் அரை சதம் கூட அடிக்காமல் சொதப்பியது தோல்விக்கு காரணமானது. அதனால் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து என்ன பயன் என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த 2 தொடர்களில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே தோற்கடித்து இங்கிலாந்திலும் வெற்றி பெற்ற தங்களை இந்த ஒரு ஃபைனலை வைத்து குறைத்து மதிப்பிட வேண்டாம் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். அதனால் அடுத்த முறை வெறும் ஒரு போட்டியை வைத்து வெற்றியாளரை தீர்மானிக்காமல் 3 போட்டிகள் கொண்ட தொடரை வைத்து தீர்மானிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர் ஃபைனலை வானிலையை கணிக்க முடியாத இங்கிலாந்து மண்ணில் நடத்தக்கூடாது என்றும் விமர்சித்தார்.

- Advertisement -

இது பற்றி போட்டியின் முடிவில் பேசியதற்கு பின்வருமாறு. “கடந்த 2 வருடங்களில் நாங்கள் சிறப்பாக செயல்படும். குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் நாங்கள் வென்றோம். எனவே எங்களுக்கு கிடைத்த நேரத்தில் நாங்கள் சிறப்பாக தயாரானோம். ஜூன் மாதத்தில் மட்டும் நாம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாட கூடாது. அத்துடன் அந்த ஃபைனல் இங்கிலாந்து மட்டுமல்லாமல் உலகின் எந்தப் பகுதிகளில் வேண்டுமானாலும் நடக்கலாம். மேலும் அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் வெற்றியாளரை 3 போட்டிகளை கொண்டு தீர்மானிக்க வேண்டும்” என்று கூறினார்.

ஆனால் முழுக்க முழுக்க ஐபிஎல் தொடரில் விளையாடிவிட்டு முழுமையாக தயாராமல் இங்கிலாந்தின் கால சூழ்நிலையை தவறாக கணித்து அஸ்வினை தேர்ந்தெடுக்காமல் தவறான அணியை தேர்ந்தெடுத்து சுமாராக பேட்டிங், பவுலிங் செய்ததால் கிடைத்த தோல்வியை சமாளிக்க ரோகித் சர்மா அவ்வாறு கூறியது இந்திய ரசிகர்களையே கடுப்பேற்றியது. அந்த நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் பல பிரிவுகளின் வெற்றியாளர்களை வெறும் ஒரே ஒரு ஃபைனல் மட்டும் வைத்து தீர்மானிக்கப்படுதாக ஆஸ்திரேலியா கேப்டன் பட் கமின்ஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க:WTC Final : எல்லாரும் தோனியாகிட முடியுமா? வரலாற்றின் மொத்த இந்திய கேப்டன்களை இன்றும் மிஞ்சும் தல – ரசிகர்கள் சோகம்

இது பற்றி போட்டியின் முடிவில் ரோகித் சர்மாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் ஏற்கனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றுள்ளோம். எனவே 3 போட்டிகள் கொண்ட தொடர் மட்டுமல்ல 16 போட்டிகள் கொண்ட தொடராக இருந்தாலும் வெல்வோம். மேலும் ஒலிம்பிக்கில் ஒரே ஒரு ஃபைனலில் தான் பதக்கத்தை வெல்கின்றனர்” என்று கூறினார். பொதுவாக உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியா நிறைய பதக்கங்களை வெல்லும் நிலையில் இந்தியா ஓரிரு பதக்கங்களை வெல்வதற்கு தடுமாறுவது வழக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement