WTC Final : எல்லாரும் தோனியாகிட முடியுமா? வரலாற்றின் மொத்த இந்திய கேப்டன்களை இன்றும் மிஞ்சும் தல – ரசிகர்கள் சோகம்

dhoni 2013 Champions Trophy World Cup
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலில் 209 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. அப்போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்றும் முதலில் பந்து வீசிய கேப்டன் ரோஹித் சர்மா மேகமூட்டத்துடன் கூடிய வானிலையை கருத்தில் கொண்டு தர வரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை கழற்றி விட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அது போக முதல் இன்னிங்ஸில் 469 ரன்களை இந்திய பவுலர்கள் வாரி வழங்கியது பெரிய பின்னடைவை கொடுத்த நிலையில் விராட் கோலி, புஜாரா, ரோகித் சர்மா போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் மீண்டும் ஒருமுறை மாபெரும் ஃபைனலில் அனுபவத்தை காட்டாமல் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தியது தோல்வியை கொடுத்தது. அதனால் 2013க்குப்பின் ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற இந்தியாவின் கனவு மீண்டும் சுக்குநூறாக உடைந்தது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

தோனியாகிட முடியாது:
முன்னதாக 2014இல் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்று 2016 – 2021 வரை நம்பர் ஒன் அணியாக இந்தியாவை வெற்றி நடை போட வைத்த விராட் கோலி உலகக் கோப்பைகளை வெல்லவில்லை என்று விமர்சனங்களை சந்தித்தார். மேலும் கடந்த ஃபைனலில் அவரது தலைமையில் நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்த இந்தியா டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் முதல் முறையாக தோற்றது. அதனால் தொடர விரும்பியும் அவரின் கேப்டன்ஷிப் பதவியை வலுக்கட்டாயமாக பறித்த பிசிசிஐ ரோகித் சர்மாவிடம் ஒப்படைத்தது. அந்த நிலையில் 5 ஐபிஎல் கோப்பைகளை அசால்டாக வென்று தோனியையே மிஞ்சிய ரோகித் சர்மா புதிய கேப்டனாக பொறுப்பேற்றதால் இந்தியா ஐசிசி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வழக்கம் போல இரு தரப்பு தொடர்களில் அட்டகாசமாக செயல்பட்டு அவரது தலைமையில் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த இந்தியா 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் நாக் அவுட் சுற்றில் சொதப்பி எந்த மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் சந்திக்கவில்லை என்று நிருபித்தது. இருப்பினும் அந்தத் தொடர்களில் அரையிறுதியுடன் இந்தியா வெளியேற நிலையில் இதற்கு முன் ஐபிஎல், ஆசிய கோப்பை, நிதிஹாஸ் கோப்பை உட்பட ரோகித் சர்மா விளையாடிய எந்த ஃபைனலிலும் தோல்வியை சந்தித்ததில்லை என்பதால் இம்முறை நிச்சயம் வெல்லும் என்று ரசிகர்கள் நம்பினார்.

- Advertisement -

இருப்பினும் அவராலும் இந்த ஃபைனலில் வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியவில்லை. அதன் காரணமாக ஏமாற்றமடைந்துள்ள ரசிகர்கள் முன்னாள் கேப்டன் தோனியை நினைத்து சமூக வலைதளங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஏனெனில் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத நிலைமையில் 2007ஆம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற அவர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இளம் வீரர்களை சிறப்பாக வழி நடத்தி முக்கிய தருணங்களில் தைரியமான முடிவை எடுத்து பரம எதிரி பாகிஸ்தானை ஃபைனலில் தோற்கடித்து கோப்பையை வென்று காட்டினார்.

அது ராகுல் டிராவிட் தலைமையில் சந்தித்த 2007 உலகக் கோப்பை தோல்விக்கு மருந்தாக அமைந்தது. அதே போல் 2010ஆம் ஆண்டு வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியாவை தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக முன்னேற்றிய அவர் 2011ஆம் ஆண்டு கௌதம், கம்பீர் யுவராஜ் சிங் உள்ளிட்ட அனைத்து வீரர்களையும் அற்புதமாக வழிநடத்தி 28 வருடங்கள் கழித்து உலக கோப்பையை வென்று காட்டினார்.

- Advertisement -

மேலும் 2013இல் இதே இங்கிலாந்து மண்ணில் தாம் உருவாக்கிய ரோஹித், விராட், ரெய்னா போன்ற இளம் வீரர்களை வைத்து சாம்பியன்ஸ் டிராபி வென்ற அவர் உலகிலேயே 3 விதமான உலக கோப்பைகளை வென்ற முதல் கேப்டன் என்ற ரிக்கி பாண்டிங் படைக்காத சாதனையை படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். மொத்தத்தில் அவரது தலைமையில் 4 ஐசிசி ஃபைனல்களில் விளையாடிய இந்தியா 3 கோப்பைகளை வென்றது.

இதையும் படிங்க:WTC Final : சாக்கு சொல்ல விரும்பல. ஆனாலும் தோல்விக்கு இதுதான் காரணம் – ராகுல் டிராவிட் ஓபன்டாக்

ஆனால் 1975 முதல் 2023 வரை கங்குலி, விராட், ரோகித் போன்ற இதர கேப்டன்கள் தலைமையில் 7 ஃபைனல்களில் விளையாடிய இந்தியா 1983இல் மட்டுமே முழுமையாக கபில் தேவ் தலைமையில் கோப்பையை வென்றது. அந்த வகையில் எல்லோரும் தோனியாகிட முடியாது என்று தெரிவிக்கும் ரசிகர்கள் அவரை மிஸ் செய்வதாகவும் கூறுகின்றனர்.

Advertisement