அவங்க தோத்தது கஷ்டமா தான் இருக்கு.. அடக்க முடியாத சிரிப்புடன் சோகத்தை வெளிப்படுத்திய கமின்ஸ்

Pat Cummins
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் 3 வாரங்களை கடந்து வெற்றிகரமாக ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வெல்லும் லட்சியப் பயணத்தில் முதல் 5 போட்டியில் 5 தொடர்ச்சியான வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் டாப் இடங்களை பிடித்து செமி ஃபைனல் வாய்ப்பை ஏறத்தாழ உறுதி செய்துள்ளது.

அதே போல நியூசிலாந்து, தென்னாபிரிக்கா ஆகிய அணிகளும் நல்ல வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் டாப் 3 இடங்களுக்குள் அசத்தி வருகிறது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் நல்ல துவக்கத்தை பெற்ற போதிலும் அதன் பின் 4 தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து லீக் சுற்றுடன் வெளியேறுவது உறுதியாகியுள்ளது.

- Advertisement -

சோகமான மகிழ்ச்சி:
அதைவிட சொந்த மண்ணில் இந்தியாவுக்கே மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் தலைமையிலான நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும் தங்களுடைய முதல் 5 போட்டிகளில் 4 தோல்விகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 9வது இடத்திற்கு சரிந்துள்ளது. குறிப்பாக கத்துக்குட்டி ஆப்கானிஸ்தானிடம் முதல் முறையாக தோல்வியை சந்தித்த அந்த அணி சற்று பலவீனமான இலங்கையிடம் 156 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது.

அதன் காரணமாக எஞ்சிய போட்டிகளில் வென்றாலும் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்று கோப்பையை தக்க வைக்கும் வாய்ப்பை இங்கிலாந்து கோட்டை விட்டுள்ளது என்று சொல்லலாம். இந்த சூழ்நிலையில் “உங்களுடைய நண்பர்களாக இருக்கும் வீரர்கள் எதிரணிகளில் இருப்பதாக சொல்கிறீர்களே. அப்படியானால் நேற்று இரவு இங்கிலாந்து தோல்வியை சந்தித்தது பார்த்து மனமுடைந்து போனீர்களா” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

- Advertisement -

ஆனால் அந்தக் கேள்வியை எழுப்பும் போதே புன்னகைக்க துவங்கிய அவர் தம்மையும் கட்டுப்படுத்த முடியாமல் வெளிவந்த சிரிப்பை அடக்க முயற்சித்தார். இருப்பினும் ஆஸ்திரேலியாவின் பரம எதிரியான இங்கிலாந்து நடப்பு சாம்பியனாக இருந்தும் தோல்வியை சந்தித்து இத்தொடரிலிருந்து முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறுவது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க: அவங்க தோத்தது கஷ்டமா தான் இருக்கு.. அடக்க முடியாத சிரிப்புடன் சோகத்தை வெளிப்படுத்திய கமின்ஸ்

அதனால் புன்னகையை கட்டுப்படுத்த முடியாத அவர் “ஆம் அதை பார்ப்பதற்கு சோகமாக இருக்கிறது. அதைப் பற்றி சொல்ல மேற்கொண்டு எதுவும் என்னிடம் இல்லை” என்று சிரித்துக் கொண்டே சொன்னார். முன்னதாக இத்தொடரில் ஆரம்பத்திலேயே தோல்விகளை சந்தித்த ஆஸ்திரேலியா தான் புள்ளி பட்டியலில் 10வது இடத்தில் இருந்தது. ஆனாலும் அதன் பின் அடுத்தடுத்த வெற்றிகளால் அசத்திய ஆஸ்திரேலியா தற்போது பள்ளி பட்டியலில் டாப் 4 இடத்திற்குள் நுழைந்து தங்களை 5 கோப்பைகளை வென்ற வெற்றிகரமான அணி என்பதை நிரூபித்து வருவது குறிப்பிடப்பட்டது.

Advertisement