என்னய்யா பித்தலாட்டமா இருக்கு? நேரலையில் கண்முன்னே அரங்கேறிய சொதப்பல்.. அம்பயர்களை விளாசும் ரசிகர்கள்

LBW Review
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 27ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற லீக் போட்டியில் தெனாப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் சுமாராக விளையாடி 46.4 ஓவரில் 270 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 50, சவுத் சாக்கில் 52 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக தப்ரிஸ் சம்சி 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு கேப்டன் தெம்பா பவுமா 28, குயிண்டன் டீ காக் 24, டுஷன் 21, ஹென்றிச் க்ளாஸென் 12 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் மறுபுறம் சிறப்பாக விளையாடி 50 ரன்கள் கடந்து வெற்றிக்கு போராடிய ஐடன் மார்க்ரமுக்கு கைகொடுக்க முயற்சித்த டேவிட் மில்லர் 29, மார்கோ யான்சன் 20 ரன்கள் எடுத்து அவுட்டானார்கள்.

- Advertisement -

சர்ச்சையான தீர்ப்பு:
இருப்பினும் மார்க்ரம் தொடர்ந்து போராடி 91 ரன்களில் அவுட்டானதால் பரபரப்பு ஏற்பட்ட போதிலும் கடைசியில் கேசவ் மகாராஜ் 7*, தப்ரிஸ் சம்சி 4* ரன்கள் எடுத்தனர். அதனால் 47.2 ஓவரில் இலக்கை எட்டிய தென்னாபிரிக்கா 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. மறுபுறம் சாகின் அப்ரிடி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்தும் தொடர்ந்து 4வது தோல்வியை பதிவு செய்த பாகிஸ்தான்
முன்னதாக இந்த போட்டியில் லீக் சுற்றுடன் வெளியேறுவது உறுதியாகியுள்ளது.

உசாமா மிர் வீசிய 19வது ஓவரின் 5வது பந்தை எதிர்கொண்ட வேன் டெர் டுஷன் சரியாக அடிக்காமல் காலில் வாங்கியதை தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்கள் எல்பிடபிள்யூ முறையில் கேட்ட அவுட்டை களத்திலிருந்த நடுவரும் உடனடியாக கொடுத்து விட்டார். ஆனாலும் அதில் திருப்தியடையாத டுசன் டிஆர்எஸ் ரிவியூ கேட்டதை தொடர்ந்து 3வது நடுவர் அதை சோதித்தார். அப்போது பந்து லெக் ஸ்டம்ப்பில் அடிக்காமல் சென்றது தெளிவாக தெரிந்ததால் தீர்ப்பு மாற்றி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் அடுத்த சில நொடிகளில் அந்த சோதனை செயல்முறை பெரிய திரையில் காண்பிக்கப்படுவது நிறுத்தப்பட்டு பாகிஸ்தான் வீரர்கள் காட்டப்பட்டனர். அதை தொடர்ந்து மீண்டும் அதே அவுட்டை நடுவர் சோதித்த போது அதே பந்து லெக் ஸ்டம்ப்பில் அடிப்பதாக காண்பிக்கப்பட்டது மொத்த ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. அதனால் டுஷன் அவுட்டாகி சென்ற நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டாலும் மொத்த ரசிகர்களும் என்னடா இது பித்தலாட்டமா இருக்கு என்று சமூகவலைதளங்களில் விமர்சிக்க துவங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: நான் மட்டும் தூக்கி அடிச்சி அவுட் ஆயிருந்தேன்.. பேட்ஸ்மேனாக விளையாடியது குறித்து – ஆட்டநாயகன் ஷம்சி கலகலப்பு

ஏனெனில் முதல் சோதனைகள் ஸ்டம்ப் மீது படாத பந்து எப்படி 2வது சோதனையில் திடீரென பட்டது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இத்தனைக்கும் நேரலையில் தாங்கள் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே இப்படி நடந்ததால் டெக்னிக்கல் தவறாக இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். சொல்லப்போனால் அந்த தீர்ப்பு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திய போதிலும் தென்னாபிரிக்கா போராடி வென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement